பெங்களூரு அணிக்கு பிறகு விராட் கோலி இந்த அணிக்கு விளையாடலாம் – டேல் ஸ்டெயின் கருத்து

0
1112
Virat Kohli and Dale Steyn

கடந்த ஒரு வாரத்துக்குள் விராட் கோலி இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி இந்திய அணியின் டி20 போட்டிகளில் கேப்டன் பதவியை துறந்தார் கோலி. ரசிகர்களால் இதையே தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்த போது நேற்று முன்தினம் ஐபிஎல் போட்டிகளுக்கு அடுத்த வருடம் முதல் கேப்டனாக செயல்பட மாட்டேன் என்று கூறினார் கோலி. மேலும் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் செயல்படுவதால் வேலைப்பளு அதிகமாக இருப்பதன் காரணமாக கேப்டன் பதவியை துறப்பதாகவும் அவர் காரணம் கூறினார். ஆனால் பிசிசிஐ நிர்வாகத்திற்கும் விராட் கோலிக்கும் ஏதோ மனக்கசப்பு இருப்பதாகவே பல்வேறு பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வந்தன.

ஐபிஎல் தொடரின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த விராட் கோலி இதுவரை 6000-கும் அதிகமான ரன்களை ஐபிஎல் தொடரில் குவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றிலேயே 6000 ரன்களை கடந்த ஒரே வீரர் இவர்தான். ஆனால் இந்த தொடரில் அவரால் தனது பழைய ஃபார்மை தொடர முடியவில்லை. இதனால் வரிசையாக இவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் விராட் கோலி ஏன் தனது கேப்டன் பதவியை துறந்தார் என்று பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார். ஸ்பெயின் பேசுகையில் இன்னமும் இரண்டு மூன்று ஆட்டங்களில் விராட்கோலி சரியாக ரன்கள் எடுக்க வில்லை என்றால் அவரிடம் எல்லாருமே கேள்வி கேட்கத் துவங்குவர். இதனால் முன்னெச்சரிக்கையாக தனது கேப்டன் பதவியைத் துறந்து உள்ளார் விராட் கோலி என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் ஸ்டெயின் பேசுகையில் என்னதான் வீரர்கள் நான் ஒரே அணியில் தான் இருப்பேன் என்று கூறினாலும் காலத்தின் கட்டாயம் காரணமாகவும் பழைய ஃபார்ம் தக்கவைத்துக்கொள்ள முடியாததன் காரணமாகவும் வேறு அணிக்கு மாறுவது வழக்கம் தான் என்று கூறினார். கோலி தான் கடைசி வரை பெங்களூரு அணிக்கு மட்டும் தான் விளையாடுவேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் ஸ்டெயின் கூறுகையில் டி20 கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த வீரர்களில் கூட பெங்களூரு அணியை விட்டு வெளியேறினார். அதேபோல கால்பந்து உலகின் ஜாம்பவானான பெக்காம் கூட கடைசி நேரத்தில் மான்செஸ்டர் அறையை விட்டு வெளியேறி வேறு அணிக்கு விளையாடினார். அதேபோல விராட் கோலியும் வருங்காலங்களில் வேறு அணிக்கு ஆட செல்லலாம் தான் பிறந்த நகரமான டெல்லி அணிக்கு வரும் காலங்களில் இவர் ஆடலாம் என்று ஸ்டெயின் கூறியுள்ளார்.