தனி ஆளாக போராடிய ஸ்டோக்ஸ்… கம்மின்ஸ் 6 விக்கெட்ஸ்! இங்கிலாந்தை 237 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா! – முதல் இன்னிங்ஸ் முடிவில் முன்னிலை!

0
532

மூன்றாவது டெஸ்டிலும் ஸ்டோக்ஸ் தனி ஆளாக போராடி 80 ரன்கள் அடித்தார். கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் இங்கிலாந்து அணி 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 26 ரன்கள் முன்னிலையும் பெற்றது.

ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்கிலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு மிச்சல் மார்ஸ் 118 பந்துகளில் 118 ரன்கள் அடித்து இன்னிங்ஸின் திருப்புமுனையாக இருந்தார்.

- Advertisement -

மார்ஸ் அடித்த அபார சதத்தால் 85 ரன்களில் 4 விக்கெட்டுகள் பறிகொடுத்து தடுமாறி வந்த ஆஸ்திரேலியா அணி 200 ரன்களை விரைவாக கடந்தது. மார்ஸ் ஆட்டம் இழந்த பிறகு மற்ற வீரர்களும் சொற்பொருள்களுக்கு வெளியேறியதால் முதலில் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலிய அணி.

இதனையடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. முதல் நாள் முடிவில் ஜாக் கிராலி அதிகபட்சமாக 33 ரன்கள் அடித்து அவுட் ஆனார். பென் டக்கட் மற்றும் ஹாரி புரூக் இருவரும் சொற்பரன்களுக்கு வெளியேறினர்.

முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 68 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களத்தில் இருந்தனர். 195 ரன்கள் பின்தங்கியிருந்தது.

- Advertisement -

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே ரூட் விக்கெட்டை இழந்தது. விரைவாக ஜானி பேர்ஸ்டோவ் உம் அவுட் ஆகினார். 87 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து ஆட்டம் கண்டது இங்கிலாந்து.

கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒருபுறம் நின்று கொண்டார். மற்றொருபுறம் மொயின் அலி 21 ரன்கள், மார்க் வுட் 24 ரன்கள், வோக்ஸ் 10 ரன்கள் என சொற்கள் பாட்டாஷிப் அமைத்து அவுட் ஆகினர். கடைசி வரை போராடிய பெண் ஸ்டோக்ஸ் அரை சதம் கடந்து என்பது ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

இறுதியில் கேப்டன் கம்மின்ஸ் தனது அபார பந்துவீச்சால் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதோடு 26 ரன்கள் பின்தங்கி இருந்தது.