சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் வரும் ஞாயிற்றுக்கிழமை பலப் பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்திய அணி நடப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக மட்டும் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்தியாவும் நியூசிலாந்தும் கடந்த 2000 ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இதில் பிளமிங் தலைமையிலான நியூசிலாந்து அணியும், கங்குலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
இதன் பிறகு 2002 ஆம் ஆண்டு இந்திய அணி இலங்கையுடன் கோப்பையை பகிர்ந்து கொண்ட நிலையில், 2013 ஆம் ஆண்டு தோனி தலைமையான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பு ரோகித் சர்மா அணிக்கு ஏற்பட்டிருக்கிறது.
பரிசுத் தொகை அதிகரிப்பு:
அது மட்டுமில்லாமல் கடைசி மூன்று முறையும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கும், தோற்கும் அணிக்கும் எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.இந்த தொடருக்கு மொத்தம் ஐசிசி மொத்தமாக 60 கோடி ரூபாய் பரிசு தொகையை அறிவித்திருக்கிறது.
இது 2017 ஆம் ஆண்டு பரிசு தொகையை விட 53 சதவீதம் அதிகமாகும். இந்த தொடரில் தகுதி பெற்ற 8 அணிக்கும் தலா ஒரு கோடி ரூபாய் 8 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 29 லட்சம் கிடைக்கும்.
கோப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
அந்த வகையில் நியூசிலாந்து அணி இரண்டு வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணிக்கு 58 லட்சம் ரூபாயும், இந்திய அணி மூன்று போட்டியிலும் வெற்றி பெற்றிருப்பதால் 88 லட்சம் ரூபாயும் பரிசுத்தொகை தனியாக கிடைக்கும். இதேபோன்று சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை வெல்லும் அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 19 கோடி ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்படும். ரன்னர் அப் அணிக்கு 9 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும்.
இதையும் படிங்க:விராட் கோலிக்கு கோபம் வர மாதிரி அத சொன்னேன்.. ஆனா அவர் இத செஞ்சார் – அப்ரார் அகமது பேட்டி
இதனால் இந்த தொடரை இந்தியா வென்றால் ஒட்டுமொத்தமாக 21 கோடியே 40 லட்சம் ரூபாயை பெறும். இதுவே நியூசிலாந்து அணி பட்டம் வென்றால் 21 கோடியே 10 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்தியா பைனலில் தோற்றால் ஒட்டுமொத்தமாக 11 கோடியே 60 லட்சமும், நியூசிலாந்து அணி பைனலில் தோற்றால் 11 கோடியே 40 லட்சம் ரூபாய் பரிசு தொகையும் கிடைக்கும்.