உலக டெஸ்ட் இறுதிப்போட்டி இந்திய அணியில் இருந்து வெளியேறிய சிஎஸ்கே ருதுராஜ்; உள்ளே வந்த ஜெய்ஸ்வால் ; ஏன் இந்த திடீர் மாற்றம்?!

0
3582
Ruturaj

ஐபிஎல் 16ஆவது சீசன் தனது கடைசி நாளில் நிற்கிறது. இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருக்கும் இறுதிப்போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

ஐபிஎல் தொடரில் முடிவுக்குப் பின் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து செல்கிறது.

- Advertisement -

இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் மாதம் ஏழாம் தேதி துவங்கி நடைபெற இருக்கிறது.

இதற்காக இந்திய அணி ஐபிஎல் தொடரின் பாதியில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா கேப்டனாக தொடர்கிறார். மேலும் மூத்த அனுபவ வீரர் ரகானே அணியில் இடம் பெற்று இருக்கிறார்.

இந்த நிலையில் ஸ்டான்ட்பை வீரர்களாக ருதுராஜ், சூரியகுமார், முகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்று இருந்தார்கள். ஆனால் தற்சமயம் ருதுராஜ் இதிலிருந்து வெளியேறி இருக்கிறார். அவருக்கு அடுத்த மாதம் மூன்று மற்றும் நான்காம் தேதியில் திருமணம் நடக்க இருப்பதால் அவர் இந்த முடிவை எடுக்க வேண்டியதாக இருந்திருக்கிறது.

- Advertisement -

மேலும் ருதுராஜ் இடத்தில் நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்ட இளம் இடதுகை வீரர் ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெற்று இருக்கிறார். இதற்கு முன்பு அவர் இந்திய ஏ டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இடத்திற்கு அபிமன்யு ஈஸ்வரன் வராதது எல்லோருக்கும் ஆச்சரியப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

ஜெய்ஸ்வால் உள்நாட்டு முதல் தர போட்டிகளில் 1845 ரன்களை 18 போட்டிகளில் 80.21 சராசரியில் அடித்திருக்கிறார். இதில் ஒன்பது சதங்களும் இரண்டு அரை சதங்களும் அடக்கம்.