“சிஎஸ்கே பிளே ஆப் போகாது, இது மட்டும் நடந்தால்” – பரபரப்பை கிளப்பிய இந்திய முன்னாள் வீரர்!

0
16117
CSK

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பிளே ஆப் வாய்ப்புக்கு 15 புள்ளிகள் உடன் மிகவும் பலமான ஒரு அணியாக இருந்தது. ஆனால் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியதும் மொத்தமும் மாறிப் போய் இருக்கிறது!

நேற்றைய போட்டிக்கான டாசில் வென்றதும் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் தனது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

- Advertisement -

ஆனால் நேற்று ஆட்டம் தொடங்கியதுமே இது வழக்கமான ஆடுகளம் இல்லை என்கின்ற புரிதல் அவருக்கு ஏற்பட்டு, முதலில் பேட்டிங் செய்திருக்கக் கூடாது என்று நினைக்கும் அளவிற்கு மாறியது.

அதற்கேற்றார் போல் கொல்கத்தா அணியின் ஸ்பின் யூனிட் மிகச் சிறப்பாக செயல்பட்டது. வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் இருவரும் மிகச் சிறப்பாக பந்து வீசி சென்னை அணியை கட்டுப்படுத்தினார்கள்.

ஒரு முனையில் சிவம் துபே ஒரு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 34 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் நின்றபொழுதும், மகேந்திர சிங் தோனி கடைசி இரண்டு பந்துகளுக்கு களத்திற்கு வந்த பொழுதும், சென்னை அணியால் 150 ரன்னை கூட எட்ட முடியவில்லை.

- Advertisement -

145 என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய கொல்கத்தா அணிக்கு பவர் பிளேவில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி தீபக் சகர் நெருக்கடி கொடுத்த போதும், அதற்கு அடுத்து வந்த கேப்டன் நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு இருவரும் அபாரமாக விளையாடி அரை சதங்கள் அடித்து, வெகு எளிதாக சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார்கள்.

இந்த தோல்விக்கு பிறகு 13 போட்டிகளில் 15 புள்ளிகள் பெற்று சென்னை அணி ஒரு மாதிரியான நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. பெங்களூரு, பஞ்சாப், கொல்கத்தா அணிகள் அடுத்த இரண்டு போட்டிகளை வென்றாலும், மும்பை, லக்னோ அடுத்த இரண்டு போட்டிகளில் ஒன்றை வென்றாலும் கூட, சென்னை அடுத்த போட்டியில் தோற்றால் ப்ளே ஆப்ஸ்க்கு வர முடியாமல் போகலாம்.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ” சிஎஸ்கே இன்னும் பிளே ஆப்க்கு தகுதி பெறவில்லை. தகுதி பெறாமலும் போகலாம். அதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. சென்னை அப்படி ஆன ஒரு சரிவான நிலையில்தான் இருக்கிறது. அவர்கள் இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே தடுமாற்றமாகத்தான் இருந்ததைக் காண முடிந்தது. சிவம் துபே களத்தில் இருந்த பொழுதும், சிஎஸ்கேவை ஒரு சின்ன டோட்டலுக்கு கட்டுப்படுத்தியது சிறப்பானது. சிவம் துபே ஆட்டமும் சிறப்பானது என்று கூறியிருக்கிறார்!