இன்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்து சிஎஸ்கே அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பந்து வீசுவது என முடிவு செய்தார். மேலும் மும்பை அணி வெற்றி பெற்ற அதே அணியுடன் களம் இறங்கியது. சிஎஸ்கே அணியில் காயமடைந்த ஆயுஷ் மத்ரே இடத்தில் கார்த்திக் சர்மா விளையாடினார்.
இதைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு கேப்டன் ருதுராஜ் 14 பந்தில் 22 ரன்கள், சர்பராஸ் கான் 8 பந்தில் 14 ரன், பிரீவிஸ் 11 பந்தில் 21 ரன்கள், கார்த்திக் சர்மா 19 பந்தில் 18 ரன்கள், ஜேமி ஓவர்டன் 7 பந்தில் 15 ரன் எடுத்தார்கள்.
இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் இறுதிவரை களத்தில் நின்று 54 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் எடுத்தார். 20 ஓவரில் சிஎஸ்கே 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது.
இதற்கு அடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குயிண்டன் டி காக் 10 பந்தில் 7 ரன், டேனிஷ் மலேவர் 0, நமன் திர் 0, சூரியகுமார் யாதவ் 30 பந்தில் 36 ரன்கள், திலக் வர்மா 29 பந்தில் 37 ரன்கள், கேப்டன் ஹார்திக் பாண்டியா 0 என அடுத்தடுத்து வெளியேறினார்கள். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவரில் 104 ரன்கள் எடுத்து சுருண்டது. சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அகேல் உசைன் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.
இதையும் படிங்க : முதல் பந்து முதல் கடைசி பந்து வரை.. சஞ்சு சாம்சன் அடித்த சம்பவ சதம்.. 7 போட்டியில் பிரம்மாண்ட சாதனை – என்ன நடந்தது?
மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் இது அதிக ரன் வித்தியாச தோல்வியாக அமைந்தது. மேலும் சிஎஸ்கே வரலாற்றில் இது அதிக ரன் வித்தியாச வெற்றியாக அமைந்தது.