தற்போது ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு விளையாடி மென்டராக இருந்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் பிறந்த நாளை முன்னிட்டு சிஎஸ்கே அணி நிர்வாகம் செய்திருக்கும் காரியம் ஒன்று ரசிகர்களால் பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் இருந்து தமிழ்நாட்டின் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்றார். அவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடினார். மேலும் அங்கிருந்து அப்படியே மென்டராகவும் தொடர்ந்து இந்த ஆண்டுக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஏலத்தில் காட்டிய விவேகம்
இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணிக்கு மிக முக்கியமானவராக தினேஷ் கார்த்திக் இருந்தார். குறிப்பாக பந்துவீச்சு யூனிட்டை வலிமையாக அமைப்பதில் பெரிய கவனம் கொடுத்தார். இதற்காக எந்த பலருடைய எக்கனாமி குறைவாக இருக்கிறதோ, மேலும் சின்னசாமி மைதானத்திற்கு தகுந்த வகையில் யாரால் ஸ்விங் செய்து பந்து வீச முடியுமோ, அவர்களைக் குறிவைத்து வாங்கி அசத்தியிருக்கிறார்.
மேலும் பேட்டிங் யூனிட்டுக்கும் விராட் கோலியை சுற்றி அதிரடியாக விளையாடக்கூடிய வகையில் வீரர்களை வாங்கினார். இந்த ஆண்டு ஆர்சிபி விளையாடி இருக்கும் மொத்தம் 14 போட்டிகளில் 9 வெவ்வேறு வீரர்கள் ஆட்டநாயகன் விருது வாங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அணியில் உள்ள ஒவ்வொருவருமே வெற்றிக்கு பங்களிக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. மேலும் தினேஷ் கார்த்திக் வழிகாட்டுதலில் ஆர்சிபி 9 ஆண்டுகள் கழித்து ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது.
சிஎஸ்கே செய்த காரியம்
தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் தாண்டி சிஎஸ்கே ஆர்சிபி ரசிகர்களுக்கு இடையே சமூக வலைதளத்தில் மிகப்பெரிய சண்டை சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டிலிருந்து இது பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது. இருந்த போதிலும் சிஎஸ்கே அணி நிர்வாகம் பெருந்தன்மையாக சமூக வலைதளத்தில் நடந்து பாராட்டுகளை அள்ளி இருக்கிறது.
இதையும் படிங்க: பஞ்சாப் ஏற்கனவே செஞ்ச ஒரு தப்புக்கு.. இன்னைக்கு அவர் கிட்ட மாட்ட போகுது – ஆகாஷ் சோப்ரா பேச்சு
இன்று தினேஷ் கார்த்திக் பிறந்த நாளை முன்னிட்டு சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நல்லா இருக்கு டிகே! நம்முடைய தமிழ்ப் பெருமையான அவருக்கு அவரைப் போலவே பெருமையான நம்முடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டு இருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையே ரசிகர்களால் பிரச்சனைகள் சென்றாலும் கூட சிஎஸ்கே அணி நிர்வாகம் செய்திருக்கும் இந்த காரியத்தை இரு அணி ரசிகர்களுமே பாராட்டி வருகிறார்கள்!






