பஞ்சாப் ஏற்கனவே செஞ்ச ஒரு தப்புக்கு.. இன்னைக்கு அவர் கிட்ட மாட்ட போகுது – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
117
Aakash

இன்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இரண்டாவது தகுதி சுற்றும் போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு மும்பை வீரர் சிறப்பாக செயல்படலாம் என ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் தகுதிச்சுற்று போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது. அதே சமயத்தில் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த போட்டியில் வெல்லும் அணி ஆர்சிபி அணியுடன் இறுதிப் போட்டியில் மோதும்!

- Advertisement -

பஞ்சாப் செய்த காரியம்

இந்த போட்டி குறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “ரோகித் சர்மா ரன்கள் எடுத்த பிறகு இந்த போட்டிக்கு வருகிறார். மேலும் அவருக்கு கிடைத்த இரண்டு அதிர்ஷ்டம் பற்றி இப்பொழுது யாரும் பேசப்போவது கிடையாது. உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தால் அதற்கு பிறகு நீங்கள் அதை எப்படி பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஜானி பேர்ஸ்டோ நன்றாக பொருந்திப் போனார். அவர் ஆரம்பத்திலேயே பவுண்டரி சிக்ஸர்கள் என்று அடித்தார்”

“பஞ்சாப் கிங்ஸ் அணியில் கழட்டி விடப்பட்ட சாம் கரன் இந்த ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியது போல ஜானி பேர்ஸ்டோ செய்யும் தருணம் இது. கொல்கத்தா அணிக்கு எதிராக கடந்த ஆண்டு அதிகபட்ச ரன்னை துரத்திய போட்டியில் இவர் பஞ்சாப் அணிக்காக சதம் அடித்திருந்தார். இருந்த போதிலும் பஞ்சாப் இவரை தக்க வைக்கவில்லை. மற்ற அணிகளும் இவரை வாங்கவில்லை. எனவே இது நிரூபிப்பதற்கான நேரம்!”

- Advertisement -

இருவரில் ஒருவர் 45 ரன்

“பஞ்சாப் தொடக்க ஜோடி பயமற்றது மற்றும் கவலையற்றது. கடந்த போட்டியில் மும்பைக்கு எதிராக பிரியன்ஸ் ஆர்யா 62 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு நல்ல புள்ளி விபரம் என்னவென்றால் இந்த இருவரில் ஒருவர் 45 ரன்கள் தாண்டி எடுத்தால் அந்த போட்டியில் எல்லாமே பஞ்சாப் அணி வெற்றி பெற்று இருக்கிறது. கடந்த போட்டியில் இவர்கள் இருவருமே கோள் அடிக்கவில்லை அதனால் அவர்கள் தோற்றார்கள்”

இதையும் படிங்க : முஷீர் கானை விடுங்க.. விராட் தன் சொந்த பையன் கூட ஆடினாலும் ஸ்லெட்ஜிங் பண்ணுவாரு – அதுல் வாசன் பேட்டி

“இது கொஞ்சம் கருப்பு வெள்ளையாகவே இருக்கிறது. இருவருமே சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் உருவாகி உள்ளது. கடந்த போட்டியில் இருவருமே சிறப்பாக செயல்படவில்லை. இருந்த போதும் மும்பைக்கு எதிராக பிரியன்ஸ் ஆர்யா 62 ரன்கள் எடுத்திருக்கிறார். இந்த ஜோடிக்கு அனுபவம் குறைவு என்றாலும் கூட திறமை நிறைய இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -