சென்னை அணியின் 20 வயதே ஆன இளம் அதிரடி ஆல் ரவுண்டர் அறிமுக வீரர் சமீர் ரிஸ்வி தான் எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்ஸருக்கு விளாசி அதன் மூலம் ஒரு மகத்தான சாதனையை படைத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 206 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் முதல் ஏழாவது ஆட்டக்காரர் வரை களமிறங்கி அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தனர். இதில் குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா சிறப்பாக விளையாடிய 46 ரன்கள் குவித்தார்.
இதற்குப் பிறகு களம் இறங்கிய ஆல்ரவுண்ட் சிவம் துபே அதிரடியாக விளையாடியது மட்டுமில்லாமல் சென்னை அணியின் ஸ்கோரை விரைவாக உயர்த்தினார். வெறும் 23 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 51 ரன்கள் குவித்த அவர் ஆட்டம் இழந்த பிறகு சென்னை அணியால் 8.5 கோடிக்கு வாங்கப்பட்ட யூபியைச் சேர்ந்த சமீர் ரிஸ்வி களம் இறங்கினார்.
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் எதிர்பாராத விதமாக களமிறங்கவில்லை. இந்நிலையில் ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் சிவம் டுபே ஆட்டம் இழந்த பிறகு சமீர் ரிஸ்வி களம் இறக்கினார்கள். 20 வயதே ஆன இவர் தனது முதல் ஐபிஎல் போட்டியில் களம் இறங்குவதால் நிதானமாக எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ஆன ரஷீத் கானின் ஓவரில் தான் எதிர்கொண்ட முதல் பந்தை டீப் ஸ்கொயர் லெக்கில் அபாரமாக ஒரு சிக்சரை விளாசினார். இந்த சிக்சர் மூலம் தான் சென்னை அணிக்குள் நுழைந்ததை ரசிகர்களுக்கு ஆணித்தரமாக நிரூபித்தார். பின்னர் அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸர் விலாசி 14 ரன்கள் குவித்த நிலையில் மோகித் சர்மாவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்த ஒன்பதாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு ராப் குயினி இந்த சாதனையை நிகழ்த்தினார். 2019ஆம் ஆண்டு இந்திய வீரர் தரப்பில் அணிக்கேத் சவுத்ரி அந்த சாதனையை நிகழ்த்தினார்.ஆனால் இளம் வீரர் சமீர் ரிஸ்வி சிஎஸ்கே தரப்பில் அந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் இனி அடுத்து வரும் போட்டிகளில் சென்னை அணிக்கு சிறந்த பினிஷராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிஎஸ்கே எங்களுக்கு இதை இப்பவே செஞ்சது நல்லது.. எங்க தோல்விக்கு காரணம் இதுதான் – சுப்மன் கில் பேட்டி
ஐபிஎல் வரலாற்றில் முதல் பந்தை சிக்சருக்கு அடித்த வீரர்கள்:
ராப் குயினி, கெவோன் கூப்பர், ஆண்ட்ரே ரஸ்ஸல், கார்லோஸ் பிராத்வைட், அனிகேத் சௌத்ரி, ஜாவோன் சியர்லஸ், சித்தேஷ் லாட், மகேஷ் தீக்ஷனா, சமீர் ரிஸ்வி