நடப்பு ஐபிஎல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கு என்ன மாதிரியான மாற்றங்கள் செய்வது சரியாக இருக்கும்? என பார்க்கலாம்.
தற்போது தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் குல்ஜப்னித் சிங் காயத்தின் காரணமாக சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஜூனியர் ஏபி.டிவிலியர்ஸ் எனப்படும் டிவால்ட் பிரிவியஸ் சிஎஸ்கே அணி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
சிஎஸ்கே அணியின் பிரச்சனை
தற்போது சிஎஸ்கே அணிக்கு இந்திய சீனியர் வீரர்களான ராகுல் திரிபாதி மற்றும் விஜய் சங்கர் இருவரும் மோசமான பார்ம் காரணமாக பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறார்கள். எனவே அடுத்த போட்டிக்கு இவர்கள் இருவரில் ஒருவரை நீக்க வேண்டியது கட்டாயமாக இருக்கிறது. இதை செய்தால் மிடில் ஆர்டரை வலிமையாக்க முடியும்.
தற்போது புதிதாக அணியில் இணையும் டிவால்ட் பிரிவியஸ் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்யக் கூடியவர். இவரை மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வைக்கலாம். நான்காவது அல்லது ஐந்தாவது இடத்திற்கு இளம் இந்திய வீரர் வன்ஸ் பேடியை களம் இருக்கலாம். இதன் மூலம் வலிமையான மிடில் ஆர்டரை சிஎஸ்கே அணிக்கு உருவாக்க முடியும்.
யார் இடத்தில் டிவால்ட் பிரிவியஸ்?
அதே சமயத்தில் வெளிநாட்டு வீரர் டிவால்ட் பிரிவியஸ் அணியில் விளையாட வேண்டும் என்றால் இன்னொரு வெளிநாட்டு வீரரான ஜேமி ஓவர்டன் வெளியேற வேண்டி இருக்கும். இதன் காரணமாக பவர் பிளேவில் பந்து வீசக்கூடிய மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் இல்லாத சூழ்நிலை சிஎஸ்கே அணிக்கு உருவாகும்.
இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்காக மிகத் தைரியமாக பவர் பிளேவில் பந்து வீசாத பதிரனாவை நீக்கிவிட்டு எல்லா இடங்களிலும் பந்து வீச முடிந்த நாதன் எல்லீசை அணியில் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் பத்திரனா பவர் பிளேவில் பந்துவீச வேண்டும். இதன் மூலம் கலீல் அகமத், அன்சூல் காம்போஜ் மற்றும் நாதன் எல்லீஸ் என மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் கிடைப்பார்கள். இவர்களுடன் ஸ்பின்னர்கள் நூர் அகமத் மற்றும் ஜடேஜா இருப்பார்கள். மேலும் ஆறாவது பவுலராக விஜய் சங்கர் இல்லை சிவம் துபேவை பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
இதையும் படிங்க : வெறும் 18 பந்து.. கெத்து காட்டும் ஆர்சிபி பவுலர்ஸ்.. வெளியான ஆச்சரிய புள்ளிவிபரம்.. ஆன்டி பிளவர் அசத்தல்
சிஎஸ்கே பிளேயிங் லெவன்:
ரச்சின் ரவீந்தரா, ஷேக் ரஷீத், டிவால்ட் பிரிவியஸ், சிவம் துபே, வன்ஸ் பேடி, ரவீந்திர ஜடேஜா, தோனி, விஜய் சங்கர், நூர் அஹமத், அன்சூல் காம்போஜ், கலீல் அகமத். மேலும் இம்பேக்ட் பிளேயராக மதிஷா பத்திரனா அல்லது நாதன் எல்லீஸ்.






