வெறும் 18 பந்து.. கெத்து காட்டும் ஆர்சிபி பவுலர்ஸ்.. வெளியான ஆச்சரிய புள்ளிவிபரம்.. ஆன்டி பிளவர் அசத்தல்

0
84
RCB

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு அந்த அணியின் பவுலிங் யூனிட் எப்படி முக்கிய காரணமாக இருக்கிறது என்பது குறித்து ஆச்சரியமான புள்ளி விபரம் வெளியாகி இருக்கிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் செயல்பாடு சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது. இதற்கு ஆர்சிபி அணி நிர்வாகம் சில முடிவுகளை எடுத்து அதை ஏலத்தில் அற்புதமாக செயல்படுத்தி இருந்தது. இதன் காரணமாக எப்பொழுதும் இல்லாத அளவுக்கு ஆர்சிபி தற்பொழுது வலிமையாக மாறியிருக்கிறது.

- Advertisement -

ஏலத்தில் முக்கிய வியூகம்

பெங்களூர் சின்னசாமி மைதானம் மிகவும் சிறியது. மேலும் ஆடுகளமும் பேட்டிங் செய்வதற்கு சாதகமாகவே பெரும்பாலும் காணப்படும். இதன் காரணமாக இங்கு ஆர்சிபி அணி விளையாடுவதற்கு நல்ல பவுலிங் யூனிட் தேவை. மேலும் மைதானம் சிறியது என்பதால் வேகத்தை விட ஸ்விங் மற்றும் லைன் அண்ட் லென்த்தில் கண்ட்ரோல் இருக்கக்கூடிய பந்துவீச்சாளர்கள் தேவை.

இதை மனதில் வைத்து சிஎஸ்கே அணி நிர்வாகம் இதை சரியாக செய்யக்கூடிய புவனேஸ்வர் குமார் மற்றும் ஹேஸில்வுட் இருவரையும் வாங்கியது. இதற்கு முன்பாகவே பந்தை ஸ்விங் செய்யக்கூடிய யாஸ் தயாலை தக்க வைத்துக் கொண்டது. இந்த கண்ட்ரோல் பந்துவீச்சாளர்களால் ஆர்சிபி அணி எப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையாக தற்பொழுது மாறி இருக்கிறது.

- Advertisement -

ஆச்சரிய புள்ளிவிபரம்

பொதுவாக எப்பொழுதும் ஆர் சி பி அணியின் பவுலிங் யூனிட் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகும். காரணம் அந்த அணியின் பவுலிங் யூனிட் வெள்ளைக் கூடிய போட்டிகளை கூட எதிரணிக்கு தாரை வார்த்து விடும். மேலும் வைட் நோபால் என இஷ்டத்திற்கு வீசித் தள்ளும். ஆட்டத்தின் கடைசி பந்தை நோபால் ஆக வீசி தோற்ற வரலாறு ஆர்சிபிக்கு சிஎஸ்கே அணியிடம் உண்டு.

இந்த நிலையில் தற்போதைய ஆர்சிபி அணி வயது மற்றும் நோபால் வீசியதில் மற்ற எல்லா அணிகளை விடவும் சிக்கனமாக இருந்திருக்கிறது. மேலும் இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இது எப்போதும் இல்லாத ஒரு விஷயமாக ஆர்சிபி அணிக்கு அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அபிசேக் நாயர் நீக்கத்திற்கு விராட் கோலி காரணமா? வெளியான புதிய தகவல்

நடப்பு ஐபிஎல் தொடரில் அணிகள் வீசிய எக்ஸ்ட்ராஸ்:

ராஜஸ்தான் ராயல்ஸ் -53 வைடு – 5 நோபால் – மொத்தம் 58
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 50 – 2 – 52
மும்பை இந்தியன்ஸ் – 44 – 2 – 46
சென்னை சூப்பர் கிங்ஸ் – 33 – 6 – 39
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 35 – 3 – 38
பஞ்சாப் கிங்ஸ் – 34 – 2 – 36
டெல்லி தலைநகரங்கள் – 27 – 7 – 34
குஜராத் டைட்டன்ஸ் – 30 – 0 – 30
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 26 – 2 – 28
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு -18 – 0 – 18

- Advertisement -