நாளை சிஎஸ்கே அணி தங்களது சொந்த மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கு சிஎஸ்கே அணியில் பிளேயிங் லெவன் எவ்வாறு அமைந்தால் சரியாக இருக்கும் என்று பார்க்கலாம்.
தற்போது சிஎஸ்கே அணி எட்டு போட்டிகளில் இரண்டு போட்டிகளை மட்டும் வென்று நான்கு புள்ளிகள் மட்டும் எடுத்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. தொடர் முடிவடையும் பொழுது குறைந்தபட்சம் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தங்கிவிடக் கூடாது என சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு தோனி சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
சிஎஸ்கே அணியின் துவக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரநாவுக்கு வெளியில் செல்லும் பந்தை விளையாடுவதில் பிரச்சனை இருக்கிறது. இதை வைத்து அவரை பவர் பிளேவில் மொத்தமாக மடக்கி விடுகிறார்கள். எனவே நாளைய போட்டியில் அவரை நீக்கிவிட்டு புதிதாக வந்திருக்கும் டிவால்ட் பிரிவியஸ்க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
இதேபோல பவர் பிளேவில் பந்து வீச முடியாத பத்திரனாவை தைரியமாக நீக்க வேண்டும். அவருடைய இடத்திற்கு ஆட்டத்தின் எல்லா பக்கத்திலும் பந்து வீசக்கூடிய நாதன் எல்லீஸ் சேர்க்கப்பட வேண்டும். இதன் மூலம் பவர் பிளேவில் ஜெமி ஓவர்டன் பந்து வீச வேண்டிய தேவை வராது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பைக்கு எதிராக கடந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் வந்த இடத்தில் வேகப்பந்துவீச்சாளர் அன்சூல் காம்போஜ் கொண்டு வரப்பட வேண்டும். மொத்தமாக பவர் பிளேவில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஜேமி ஓவர்டன் னை மிடில் ஓவர்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கடுத்து விஜய் சங்கர் எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்ய வருகிறார் என்பதால் அவருடைய இடத்திற்கு தாராளமாக இளம் வீரர் வன்ஸ் பேடியை களம் இறக்கலாம். விஜய் சங்கர் சரியான பாமில் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. எனவே அவருடைய இடத்தில் ஒரு இளம் வீரரை விளையாட வைப்பதால் எந்த நஷ்டமும் உருவாகாது. தோனி இந்த மாற்றங்களை அதிரடியாக செய்தால் ஒரு புதிய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலமானதாகவே கிடைக்கும். மேலும் கடந்த ஆண்டில் ஆர்.சி.பி செய்தது போல கடைசி ஆறு போட்டிகளை வென்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவும் முயற்சி செய்யலாம்.
இதையும் படிங்க : சொந்த மண்ணில் ஹாட்ரிக் தோல்வி ஆனாலும் கவலை இல்லை.. என் கவனம் இப்போ இதுல மட்டுமே இருக்கு – ஆர்சிபி கேப்டன்
சிஎஸ்கே பிளேயிங் லெவன்:
ஷேக் ரஷீத், ஆயுஸ் மாத்ரே, டிவால்ட் பிரிவியஸ், சிவம் துபே, வன்ஸ் பேடி, ஜேமி ஓவர்டன், தோனி, ரவீந்திர ஜடேஜா, நூர் அகமத், அன்சூல் காம்போஜ், நாதன் எல்லீஸ் மற்றும் இம்பேக்ட் பிளேயராக கலீல் அகமத்.