நடப்பு ஐபிஎல் தொடரில் பாதியில் சிஎஸ்கே அணியில் இணைந்திருக்கும் உர்வில் படேல் தோனி தனக்கு கொடுத்த அறிவுரை பற்றி கூறியிருக்கிறார்.
இந்திய உள்நாட்டு வெள்ளைப் பந்து தொடர்களில் அதிவேகமாக சதம் அடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்த 26 வயது குஜராத் வலதுகை பேட்ஸ்மேன் உர்வில் படேல் சிஎஸ்கே அணிக்கு நடுவில் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் இவர் அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணியில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தப்பித்த சிஎஸ்கே நிர்வாகம்
இந்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு நடைபெற்ற மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ரவிச்சந்திரன் அஸ்வினை வாங்கியதின் காரணமாக பல நல்ல இளம் பேட்ஸ்மேன்களை வாங்க முடியாமல் கோட்டை விட்டது. இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான சாதனைகளை சிஎஸ்கே அணி செய்து வந்தது.
இந்த நிலையில் இடையில் சுதாரித்த தோனி அணிக்குள் மற்ற வீரர்களின் காயத்திற்கு மாற்று வீரர்களை சரியாக கொண்டு வர ஆரம்பித்தார். இதன் மூலம் ஆயுஸ் மத்ரே, உர்வில் படேல் மற்றும் டிவால்ட் பிரிவீஸ் ஆகியோரை சேர்த்து தற்போதைக்கு சிஎஸ்கே பேட்டிங் யூனிட்டை கொஞ்சம் பலமானதாக மாற்றி இருக்கிறார். இதன் மூலம் சிஎஸ்கே இப்போதைக்கு தப்பிவிட்டது.
தோனி கொடுத்த அட்வைஸ்
இதுகுறித்து உர்வில் படேல் பேசும் பொழுது “நான் எப்படி விளையாடுகிறேனோ அப்படியே தொடர்ந்து என்னை விளையாடச் சொன்னார். என் விளையாட்டைப் பற்றி யார் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல் விளையாடச் சொன்னார். மேலும் ஆல் தி பெஸ்ட் என்று கூறினார். இது எளிமையாக இருந்தது. அதாவது அவர் மொத்தத்தையும் வெறும் ஐந்து வினாடியில் சொல்லிக் கடந்து விட்டார்”
இதையும் படிங்க : விராட் ரோகித் முடிவு.. நானும் அகர்கரும் என்ன செய்ய முடியும்?.. அது இதனாலதான் நடந்தது – கம்பீர் கருத்து
” 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே குஜராத் மோதிய ப்ளே ஆப் சுற்றின் போது நான் தோனி அவர்களை சந்தித்தேன். அப்போது நான் குஜராத் அணியில் இருந்தேன். நான் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன். என்னுடைய ஐடியல் உடன் புகைப்படம் எடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது நாங்கள் வேறு வேறு ஜெர்சியில் இருந்தோம். இப்போது நான் அவர் இருக்கும் அணியின் பிலேயர்களின் அவர் அணிந்திருக்கும் ஜெர்சியை அணிந்திருக்கிறேன். இது எனக்கு மிகவும் மறக்க முடியாதது” என்று கூறி இருக்கிறார்.