மூச்சு திணறி போச்சு.. எங்களை ரொம்ப கஷ்ட படுத்தினாங்க.. ஆனா இனி இப்படி இருக்காது – ரச்சின் ரவீந்திரா பேட்டி

0
4795

இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் சிஎஸ்கே 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரச்சின் ரவீந்திரா சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே வீரர் பொறுப்பான ஆட்டம்

இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவிக்க, அதன்படி மும்பை அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியது. முன்னணி வீரர்கள் சென்னை வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் விரைவாக வெளியேறியதால் சிக்கலில் இருந்த மும்பை அணியை சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா மட்டுமே ஓரளவு காப்பாற்றினார்கள். திலக் வர்மா 31 மற்றும் சூரியகுமார் யாதவ் 29 ரன்னில் வெளியேற மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது.

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. சென்னை அணியை போன்றே மும்பையிலும் தரமான சுழற் பந்துவீச்சாளர்கள் சிஎஸ்கேவை கட்டுப்படுத்தினார்கள். இருப்பினும் கேப்டன் ருத்ராஜ் அதிரடியாக விளையாட, மறுமுனையில் ரச்சின் ரவிந்திரா பொறுப்பான முறையில் விளையாடி ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் சென்றார். கேப்டன் ருத்ராஜ் 53 ரன்கள் குவிக்க, தொடக்க வீரர் ரவீந்திரா 45 பந்துகளில் 65 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் சென்னை அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் சிஎஸ்கே 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலக்கை அடைந்தது.

- Advertisement -

எங்களை சிக்கலில் தள்ளியது

இந்த சூழ்நிலையில் தொடக்க வீரர் ரவிந்த்ரா போட்டி குறித்து கூறும் போது “மும்பை அணியின் பௌலிங் எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. நடுவில் வேகத்தை குறைத்து எங்களை சிக்கலில் தள்ளினார்கள். மிடில் ஓவரில் எங்களை மூச்சுத் திணறடித்தது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. சேப்பாக்கம் மைதானம் சில நேரங்களில் மிகவும் கடினமாக இருக்கும் என்ன எதிர்பார்ப்பது என்று தெரியவில்லை. கேப்டன் ருது அற்புதமா விளையாடினார்.

இதையும் படிங்க:பயத்தை காட்டிய மும்பை இளம் வீரர்.. ரச்சின் ரவீந்திரா பொறுப்பான ஆட்டம்.. 4 விக்கெட்டில் சிஎஸ்கே வெற்றி.. ஐபிஎல் 2025

200 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடாமலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எங்கள் பேட்டிங் மிகவும் அருமையாக இருந்தது. மேலும் பாகிஸ்தானில் நான் அடைந்த காயம் தற்போது முழுமையாக குணமடைந்து விட்டது. இனிமேல் அதுபோன்று நடக்காது என்று நம்புகிறேன். ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. மேலும் அதிகமாக திரும்பவில்லை, இருப்பினும் மும்பை அணியின் நீளம் எங்களை சிக்கலில் தள்ளியது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -