சிஎஸ்கே என்கிட்ட பேசி இருந்தாங்க.. ஆனா இவ்வளவு எதிர்பார்க்கல.. தோனி சார் கிட்ட இது வேணும் – பிரசாந்த் வீர் பேட்டி

0
120
Veer

நேற்று ஐபிஎல் மினி உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அன் கேப்டு வீரர் பிரசாந்த் வீர் சிஎஸ்கே அணியால் 14.20 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். இந்த நிலையில் அவர் இவ்வளவு விலைக்கு தான் ஏலம் போனது குறித்து பேசி இருக்கிறார்.

சிஎஸ்கே அணி நிர்வாகம் இளைஞர்கள் மேல் இந்த அளவிற்கு நடந்து முடிந்த மினி ஏலத்தில் முதலீடு செய்யும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. சிஎஸ்கே தான் வைத்திருந்த பணத்தில் பெரும் அளவுக்கு இளைஞர்கள் மேல் முதலீடு செய்தது. அனுபவ வீரர்கள் மேல் பெரிய அளவில் முதலீடு செய்யவில்லை.

- Advertisement -

சிஎஸ்கே குதிரை

சிஎஸ்கே கடந்த வருடம் தங்களுடைய வழக்கமான அணுகு முறையில் அனுபவ வீரர்களின் மேல் முதலீடு செய்து அணியை உருவாக்கியது. ஆனால் அவர்களின் யாருமே தாக்கத்தை ஏற்படுத்தாததால், ஐபிஎல் வரலாறுகளில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்திற்கு சிஎஸ்கே தள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து சிஎஸ்கே உடனடியாக சுதாரித்து கீழே விழுந்த குதிரை போல எழுந்து, தங்களின் அடையாள வீரர் ஜடேஜா வரை விட்டுக் கொடுத்து, மேலும் இளம் வீரர்களின் மேல் முதலீடு செய்து அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணியை உருவாக்குவதில் கவனம் செலுத்தி இருக்கிறது. இந்த வகையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

- Advertisement -

தோனியிடம் கற்றுக்கொள்ள வேண்டும்

இது குறித்து பிரசாந்த் வீர் பேசும் பொழுது “சார் எனக்கு இது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நான் இந்த அளவிற்கு விலை போவேன் என்று எதிர்பார்க்கவில்லை. சிஎஸ்கே அதிகாரிகள் என்னிடம் முன்பு பேசி இருந்தார்கள். இருந்தாலும் இவ்வளவு பெரிய வாய்ப்பும் தொகையும் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. நான் மிகவும் பாக்கியவானாக உணர்கிறேன் தோனியை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். அவரிடம் கொஞ்சம் கற்றுக்கொள்ள வேண்டும். இதெல்லாம் ஆரம்பம்தான். நான் கிரிக்கெட் விளையாட வேண்டும்”

இதையும் படிங்க : சிஎஸ்கே வலிமையா எல்லாம் இல்ல.. இந்த பிரச்சனைகள் தீரவே இல்ல.. இதான் உண்மை – அனிருதா ஸ்ரீகாந்த் பேச்சு

“தோனி பாயிடம் என்ன விஷயங்கள் கேட்க வேண்டும் என்பது குறித்து நான் எதுவும் முடிவு செய்யவில்லை. கிரிக்கெட் மற்றும் மனநிலை ரீதியாக நான் அவரிடம் சில விஷயங்கள் கேட்கலாம். நான் அவரிடம் இருந்து கொஞ்சம் கற்றுக் கொள்ள முடிந்தாலும் அது எனக்கு மிகப்பெரிய விஷயமாக அமையும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -