சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்துள்ளது.
இதில் சென்னை அணிக்கு 10 கோடிக்கு வாங்கப்பட்ட சுழற் பந்துவீச்சாளர் நூர் அகமது முதல் போட்டியிலேயே தனது அபார திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சிஎஸ்கே மும்பை மோதல்
இந்த போட்டியில் டாசை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. மும்பை அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரரான இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மூன்று பந்துகளை எதிர்கொண்டு நான்காவது பந்தில் கலில் அகமதுவின் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் கலீல் அகமதுவின் பந்து வீச்சிலேயே போல்ட் ஆகி வெளியேறினார்.
மூன்றாவது வரிசை ஆட்டக்காரர் வில் ஜாக்ஸ் 11 ரன்னில் விளையாடிக் கொண்டிருந்தபோது அஸ்வினால் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். இந்த சூழ்நிலையில் மும்பை அணியின் மிடில் வரிசையை சாய்க்க ருத்ராஜ் சரியாக ஆட்டத்தின் 8வது ஓவரில் நூர் அகமதுவை உள்ளே கொண்டு வந்தார். சரியாக தனது 2வது ஓவரில் இருந்து நூர் அகமது தனது விக்கெட் வேட்டையை ஆரம்பித்தார்.
திருப்புமுனை ஏற்படுத்திய நூர் அகமது
குறிப்பாக மும்பை அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவை 29 ரன்னில் வீழ்த்தி, சென்னை அணிக்கு பெரிய திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்தார். மேலும் அவரோடு ஜோடி சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த மிடில் வரிசை பேட்ஸ்மேன் திலக் வர்மாவை 31 ரன்னில் எல்பிடபில்யு முறையில் வெளியேற்ற, தனது முதல் போட்டியில் விளையாடிய ராபின்மின்ஸ் மூன்று ரன்னிலும் மற்றும் அதற்குப் பிறகு நமன் திர்ரை 17 ரன்னில் போல்ட் முறையில் வெளியேற்றினார். இவரின் சிறப்பான பந்துவீச்சால் மும்பை அணியின் மிடில் வரிசை அப்படியே சரிந்தது. 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையும் படிங்க:மின்னல் வேக ஸ்டம்பிங்.. செய்த தவறை சரி செய்த தோனி.. திகைத்து போன சூர்ய குமார் யாதவ்.. ஐபிஎல் 2025
முதல் போட்டிக்கு முன்பாக இவரை 10 கோடிக்கு வாங்கியது அதிகம் என்று முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வந்த நிலையில், அந்த 10 கோடிக்கு தான் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதை முதல் போட்டியிலேயே நிரூபித்திருக்கிறார். இவரின் சிறப்பான பந்துவீச்சால் மும்பை அணி இன்னிங்ஸ் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்துள்ளது. தற்போது அடுத்ததாக சென்னை அணி பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறது.






