என் பவுலிங் பிளான் இதுதான்.. விரல்களை ரொம்ப பத்திரமா வச்சிக்கிட்டேன்.. அடுத்து ஒரு விஷயம் செஞ்சேன் – நூர் அகமது பேட்டி

0
23
Noor

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே ஸ்பின்னர் நூர் அகமத் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த போட்டியில் மொத்தம் நான்கு ஓவர்கள் பந்து வீசிய அவர் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். மிடில் ஓவர்களில் அவருடைய பந்துவீச்சு நல்ல தாக்கத்தை கொடுத்தது.

- Advertisement -

சுழல் கூட்டணி

நூர் அகமதுவுக்கு ஒரு முனையில் இறுக்கமாக யாராவது பந்து வீசினால் இவரும் சிறப்பான முறையில் பந்துவீசி விக்கெட் கைப்பற்ற கூடியவராக இருந்து வந்திருக்கிறார். நேற்று அகேல் ஹுசைன் ஒரு முனையில் சிறப்பான முறையில் பங்கு வீசினார். இது நூர் அகமத் விக்கெட் பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

இத்துடன் நேற்று பந்துவீச்சில் வேக மாறுபாடுகள் நிறைய காட்டினார். குறிப்பாக மணிக்கு 90 கிலோ மீட்டர் தாண்டியும் வீசினார். இந்த போட்டியின் மூலமாக அவர் முழுமையாக ரிதமுக்கு திரும்பி வந்திருப்பது போல தெரிகிறது.

- Advertisement -

இதைச் செய்தேன்

இந்த போட்டி குறித்து பேசி உள்ள நூர் அகமத் கூறும்போது ” என் அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கொஞ்சம் பனிப்பொழிவு இருந்தது. ஈரப்பதமும் நிலவியது. இதன் காரணமாக என்னுடைய விரல்களை உலர வைத்துக் கொள்வதில் நான் கவனம் செலுத்தினேன். இதுதான் எனக்கு சரியான இடத்தில் பந்து வீச உதவி செய்தது. இந்த ஆடுகளம் ஸ்பின்னுக்கு சாதகமாக இருந்ததில் மகிழ்ச்சி”

இதையும் படிங்க: சிஎஸ்கே ஜெயிச்ச இடம் இதுதான்.. தலைய நிமிர்த்தி வச்சிக்கிறத தவிர வேற வழி கிடையாது – ரகானே பேச்சு

“இந்த ஆடுகளத்தில் பாட்டுக்குப் பந்து சரியாக வரவில்லை. இதை நான் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்தேன். கண்டிப்பாக இந்த வெற்றி எனக்கு நம்பிக்கையை கொடுக்கிறது. தொடர்ந்து என்னுடைய அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்ய விரும்புகிறேன். மேலும் வேகத்தை மாற்றி மாற்றி பேசுவது எப்பொழுதும் நல்லது. நேற்று 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பந்துகள் சிறப்பாக வேலை செய்தன” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -