நேற்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தங்கள் சொந்த மைதானத்தில் கொல்கத்தா அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியின் தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரகானே பேசியிருக்கிறார்.
முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. பவர் பிளேவில் ஆயுஸ் மத்ரே அதிரடியாக விளையாடி சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தினார். இதற்கு அடுத்து விளையாடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சிஎஸ்கே வெற்றி பெற்ற இடம்
நடப்பு ஐபிஎல் தொடரில் 200 ரன்னுக்கு கீழே எடுத்து வெற்றி பெற்ற முதல் அணியாக சிஎஸ்கே இந்த போட்டியில் வெற்றி பெற்றது. எல்லா அணிகளும் மிகவும் அதிரடியாக விளையாடி வரும் நிலையில் சிஎஸ்கே இதை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ரகானே பேசும்போது “நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம் என்று நினைத்தோம். இந்த மைதானத்தில் எதிரணியை 190 ரன்னில் கட்டுப்படுத்துவது மிகவும் சிறந்த விஷயம். அதே சமயத்தில் சிஎஸ்கே பவர் பிளேவில் சிறப்பாக விளையாடி இருந்தது. இதைத் தாண்டியும் அவர்களை கட்டுப்படுத்தியது அருமையாக இருந்தது. ஆனால் நாங்கள் பவர் பிளேவில் சரியாக விளையாடாதது நல்ல முடிவை கொடுக்கவில்லை”
தலையை உயர்த்திக் கொள்ள வேண்டும்
“எங்களுடைய அணியின் காம்பினேஷன் உண்மையில் கடந்த இரண்டு போட்டிகளாக சிறப்பாகவே இருந்து வருகிறது. ஆனால் போட்டிகளை வெல்லாத பொழுது காம்பினேஷன் பற்றி யோசிக்க வேண்டியது வருகிறது. இதைவிட முக்கியமாக பாசிட்டிவாக இருந்து தலையை நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க: நூர் அகமது தோனி கிட்ட பேசின அந்த விஷயம்தான்.. அவரோட ஸ்பெஷல் பௌலிங்குக்கு காரணம் – சிஎஸ்கே துணை கோச்
“கார்த்திக் தியாகி மிகவும் சிறப்பாக பந்து வீசுகிறார். அவருக்கு முழு பாராட்டுகளும் செல்லும். அவர் அபாரமான வேகத்தில் வீசுவதோடு ஒவ்வொரு போட்டியிலும் தனது திறமையை மெருகேற்றிக் கொண்டே வருகிறார். அவரை எதிர்கொண்டு பெரிய சிக்சர்கள் அடிப்பது எளிதான விஷயம் கிடையாது. நாங்கள் இப்போதைக்கு நம்பிக்கை உடன் பாசிட்டிவாக இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






