தோனி பாய் இருக்கிறதே எனக்கு போதும்.. அவ செஞ்ச அந்த விஷயம் இந்த உலகத்திலேயே இல்ல – நூர் அஹமத் பேச்சு

0
163
Noor

இன்று ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய போட்டியாக நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் முறையாக முதல் போட்டியில் விளையாடும் ஆப்கானிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர் நூர் அகமத் நான்கு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி முக்கிய காரணமாக விளங்கினார்.

- Advertisement -

நூர் அகமத் சிறப்பான செய்கை

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் மூன்று விக்கெட்டுகளை சீக்கிரத்தில் இழந்துவிட்ட போதிலும் கூட, இதற்கு அடுத்து வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் அணியை சரிவிலிருந்து எடுத்து நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.

இந்த நேரத்தில் பந்து வீச்சுக்கு வந்த 100 அகமத் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, நமன் திர் மற்றும் ராபின் மின்ஸ் என தொடர்ந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி ஒரே அடியாக சரிவை சந்தித்து இறுதியாக 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. நூர் அகமத் நான்கு ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

மகி பாய் இருப்பது போதும்

இந்த போட்டியில் ஆட்டநாயகன் வென்ற நூர் அகமத் பேசும் பொழுது “ஆட்டநாயகன் விருது வென்றது பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயத்தில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதும் அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்திருப்பதும் அதைவிட பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது. பந்தை சரியான இடத்தில் வீசுவதற்கு நான் முக்கிய கவனம் கொடுத்தேன். இதுதான் எனக்கு முக்கியமான விஷயமாக இருந்தது”

இதையும் படிங்க : மூச்சு திணறி போச்சு.. எங்களை ரொம்ப கஷ்ட படுத்தினாங்க.. ஆனா இனி இப்படி இருக்காது – ரச்சின் ரவீந்திரா பேட்டி

“மேலும் சூரியகுமார் விக்கெட் மிகவும் சிறப்பானதாக இருந்தது. தோனி பாய் அவரை ஸ்டெம்பிங் செய்த விதம் இந்த உலகத்திலேயே கிடையாது. அது நம்ப முடியாத அளவுக்கு வேகமாக இருந்தது. அவர் போன்ற ஒருவர் விக்கெட் கீப்பராக இருப்பது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது. மேலும் அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அவர் அந்த இடத்தில் இருந்தாலே எனக்கு போதும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -