சி.எஸ்.கே அணி இந்த 4 வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்க வேண்டும் – சாம் கர்ரன் வலியுறுத்தல்

0
5711
Sam Curran about 4 Foreigners for CSK 2022

இந்திய கிரிக்கெட் இரசிகர்கள் தாண்டி, உலக நாட்டு கிரிக்கெட் இரசிகர்களும் தத்தமது நாட்டின் வீரர்கள் எப்படி விளையாட போகிறார்கள் என்பதைக் காண ஐ.பி.எல் தொடருக்காய் காத்திருக்கிறார்கள்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2022 ஐ.பி.எல் 15வது சீசன் இந்தியாவில் நடைபெறுமா? இல்லை கடந்த இரு சீசன்கள் போல, யு.ஏ.இ-ல் நடைபெறுமா? என்ற சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்பட்டு, இந்தியா என முடிவகி, வீரர்களுக்கான ஐ.பி.எல் மெகா ஏலமும் சென்ற மாதம் பிப்ரவரியில் பெங்களூரில் நடத்தி முடிக்கப்பட்டது.

- Advertisement -

பத்து அணிகளும் தங்கள் வீரர்களோடு பயிற்சிகளை முடித்துக்கொண்டு, ஐ.பி.எல் நடைபெறும் மும்பை-புனே வில் தற்போது முகாமிட்டுள்ளனர்.

மும்பையில் நாளை தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொள்கின்றன.

வீரர்களின் விலகல், காயங்கள், தேசிய அணிகளுக்கான கடமைகள் என எந்தெந்த அணியில் எந்தெந்த உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் ஆடும் நிலையில் இருக்கிறார்கள் என்பது இரசிகர்களிலிலுந்து, விமர்கசகர்கள், முன்னாள் வீரர்களென முக்கிய விசயமாக அலசப்பட்டு வருகிறது.

- Advertisement -

மேலும் ஆடும் அணியில் எந்த 11 வீரர்கள் விளையாடுவது சரியாய் இருக்குமென்றும், எந்த வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவது சரியாய் இருக்கும் என்றும் முன்னாள், இந்நாள் வீரர்கள் அணிப்பட்டியலை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸில் கடந்த முறை இடம் பெற்றிருந்த வீரர்களான இந்திய வீரர் ப்யூஷ் சாவ்லாவும், இங்கிலாந்து வீரர் சாம் கரனும், சென்னை அணியின் முதல் ஆட்டத்தில் இடம்பெறும் வெளிநாட்டு வீரர்கள் குறித்த தங்களின் கருத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.

முதல் ஆட்டத்தில் மொயீன் அலி விசா பிரச்சினையால் விளையாட முடியாத நிலையில், கான்வோ, பிராவோ, மில்னே, ஜோர்டானை பியூஷ் சாவ்லா குறிப்பிட்டுள்ளார்.

சுட்டிக்குழந்தை சாம் கரன் தன் தேர்வாக, ஜோர்டான், பிராவோ, சான்ட்னர், கான்வோ ஆகிய வீரர்களைக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை விளையாடும் முதல் ஆட்டத்தில் உங்களின் வெளிநாட்டு வீரர்கள் யார் யார்?!