அதிகபட்ச ஸ்கோரில் பல சாதனை படைத்த சிஎஸ்கே; கான்வே ரகானே துபே தாறுமாறு அதிரடி பேட்டிங்!

0
1554
CSK

ஐபிஎல் 16வது சீசனில் இன்று இரண்டாவது போட்டியில் 33 வது போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தற்பொழுது நடந்து வருகிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ரானா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அவர் முடிவு தவறு என பின்பு பெரிய வருத்தப்படும்படி சென்னை அணியின் பேட்டிங் படை அதிரடியாக விளையாடி அசத்தியிருக்கிறது.

- Advertisement -

கான்வே ருத்ராஜ் ஆட்டத்தை துவங்க முதல் விக்கட்டுக்கு இந்த ஜோடி ஏழு புள்ளி மூன்று ஓவர்களில் 73 ரன்கள் குவித்தது. ருத்ராஜ் 20 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து விளையாடிய கான்வே மிகச் சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்து 40 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 56 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ரகானே மற்றும் சிவம் துபே ஜோடி கொல்கத்தா அணியின் பந்து வீச்சை மைதானம் எங்கும் சிதறடித்து ரண்களை மலை மலையாகக் குவித்தது. சுமார் ஆறு ஓவர்கள் மட்டும் நீடித்த இந்த கூட்டணி 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. சிவம் துபே 21 பந்தில் இரண்டு பவுண்டரி ஐந்து சிக்ஸர்களுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அடுத்து வந்த ஜடேஜாவும் 8 பந்தில் இரண்டு சிக்ஸர்களுடன் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியில் வந்த மகேந்திர சிங் தோனி மூன்று பந்தில் 2 ரன் எடுத்தார். ஒரு முனையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரகானே இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 29 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 71 ரன்கள் குவித்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது.

சென்னை அணி 235 ரன்கள் எடுத்ததின் மூலம் கொல்கத்தா அணிக்கு எதிரான அதிகபட்ச ரன்களை பதிவு செய்திருக்கிறது. இதற்கு முன்பு 220 ரன்கள் எடுத்ததே கொல்கத்தாவுக்கு எதிரான அதிகபட்ச ரன்னாக இருந்தது.

மேலும் ஐபிஎல் வரலாற்றில் இது எட்டாவது அதிகபட்ச ரன் ஆகும். 263 ரன்கள் பெங்களூர் அணி குவித்து முதலிடத்தில் இருக்கிறது. இதேபோல் சென்னை அணியின் தனிப்பட்ட அதிகபட்ச ரன்களில் இது மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு முன்பு 246 ரன்கள் ராஜஸ்தான் அணிக்கு எதிராக எடுத்தது முதல் இடத்தில் இருக்கிறது!