தோனி கையில மந்திர கோல் இல்ல.. சிக்ஸர் நிறைய அடிக்கிறது நல்லது கிடையாது – பிளமிங் பேச்சு

0
135
Fleming

இன்று லக்னோ ஏகனா மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் சிஎஸ்கேவின் தற்போதைய நிலை குறித்து மிகவும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை சிஎஸ்கே அணி தற்போது அளவுக்கு மிகவும் நெருக்கடியான நிலையில் இருந்தது கிடையாது. முதல் முறையாக 5 போட்டிகளைத் தொடர்ந்து தோற்று இருக்கிறது. மேலும் முதல் முறையாக சொந்த மைதானத்தில் மூன்று போட்டிகளைத் தொடர்ந்து தோற்று இருக்கிறது. புதிய மோசமான சாதனைகள் உருவாகும் அளவுக்கு அணியின் பேட்டிங் யூனிட் இருப்பது கவலை அளிக்கிறது.

- Advertisement -

தோனி கையில் மந்திர கோல் இல்லை

இது குறித்து சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறும்பொழுது ” தோனி கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்று விட்டார். ஆனால் அவர் கையில் மந்திர கோல் ஒன்றும் கிடையாது. நாங்கள் எல்லோரும் அவருடன் இணைந்து கடினமாக உழைத்தால்தான் இதிலிருந்து மீள முடியும். இப்படியான நிலையில் நானும் தோனியும் ஏற்கனவே இருந்திருக்கிறோம். இதிலிருந்து மீள்வதற்கு அதிக எனர்ஜி தேவை. ஆனால் நம்முடைய எனர்ஜியை சரியான வழியில் செலவழிக்கிறோமா என்பது முக்கியம்”

“சிக்ஸர் அடிப்பது மட்டுமே கிரிக்கெட் கிடையாது. பவர் ஹிட்டிங் மீதும் சிக்ஸர் அடிப்பது மீதும் தற்போது பெரிய ஈர்ப்பு இருப்பதை நான் பார்க்கிறேன். அதே சமயத்தில் இன்னமும் சில அணிகள் கிரிக்கெட்டின் இயல்புத்தன்மை மாறாமல் விளையாடிக் கொண்டிருப்பதையும் நாங்கள் பார்க்கிறோம்”

- Advertisement -

கிரிக்கெட்டுக்கு இது நல்லதில்லை

“பேட்டுக்கும் பந்துக்கும் இடையில் எப்பொழுதும் ஒரு சமநிலை இருக்க வேண்டும். இதுதான் கிரிக்கெட்டுக்கு எப்பொழுதும் அழகு. எனக்கு சிக்ஸர் அடிப்பது பிடிக்கும்தான். ஆனால் பேட்டக்கும் பந்துக்கும் இடையே சமநிலை இருப்பதை உறுதி செய்வதுதான் கிரிக்கெட்டின் எதிர்கால நலனுக்கு மிகவும் முக்கியம்”

இதையும் படிங்க: ஓப்பனா சொல்றேன்.. என்னை மும்பை அணி ரிட்டையர்டு செஞ்சப்போ இப்படிதான் ஃபீல் பண்ணேன்.. மனம் திறந்து பேசிய திலக் வர்மா

“தற்போது நாங்கள் இருக்கும் நிலையில் இருந்து கம்பேக் கொடுப்பது கடினமான விஷயம்தான். இங்கிருந்து சில விஷயங்களில் நாங்கள் கவனமாக அடியெடுத்து வைத்து முன்னேறி வர வேண்டும். போட்டியில் நாங்கள் போராடாமலே தோற்றதுதான் எங்களுக்கு வேதனையை உருவாக்குகிறது. நாங்கள் கவனமாக இருந்து சில வேலைகளை செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -