லீக் தொடரில் சென்னை அணி 9-வது இடத்தில் முடிக்க இதுவே காரணம் – மோசமான சீசன் குறித்து பேசியுள்ள சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்

0
80

கடந்த ஆண்டு நான்காவது முறையாக பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு புள்ளி பட்டியல் ஏழாவது இடத்தில் லீக் தொடரை முடித்துக் கொண்டது. சென்னை அணி கடைசியாக ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் முதல் 6 ஓவர்களில் 75 ரன்கள் அடித்த நிலையில் 20 ஓவர் முடிவில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இறுதிப் போட்டியை வெற்றியுடன் முடித்துக் கொள்ளும் என்று நினைத்த நிலையில், அந்த போட்டியிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை அணியை வீழ்த்தி வெற்றி கண்டது.

நடப்பு சீசனில் அடுத்த ஆண்டுக்கான ஊக்கியாக இருக்கும் – ஸ்டீபன் பிளமிங்

- Advertisement -

இது சம்பந்தமாக பேசி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், “கடந்த வருடங்களில் இருந்த சில ஃபார்ம் வீரர்கள் இந்த ஆண்டு எங்களது அணியில் இல்லை. தீபக் சஹர் நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாட வில்லை. புதிய அணி வீரர்களுடன் புதிய அணியாக இருக்கும் பட்சத்தில் இது எப்பொழுதும் சோதனையில் தான் முடிவடையும்.கடந்த வருடங்களில் எங்களது அணி செட்டாகி கொள்ள சில கால அவகாசம் எடுத்துக் கொள்ளும். அது போன்று தான் தற்போதைய ஐபிஎல் தொடரும்.

எங்களுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் நாங்கள் நினைத்ததை விட அதிக வாய்ப்புகள் இருந்தும் அதை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போனது. பேசுவது சுலபம் என்றாலும் அந்த நேரத்தில் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு செயல்படுவது சிறிது கடினம்தான். லீக் தொடரிலும் எங்களது அணி 9-வது இடத்தில் நடப்பு ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டது. எங்களால் பிளே-ஆப் சுற்றுக்கும் செல்ல முடியாமல் போனது.

புதிய இளம் வீரர்களை விளையாட வைத்து அந்த போட்டிகளில் கிடைக்கும் வெற்றியின் மூலம், அவர்களது தன்னம்பிக்கையை பலப்படும்.அதே சமயத்தில் சீனியர் வீரர்களிடமிருந்து ஒரு சில விஷயங்களை அவர்கள் கற்றுக்கொள்வார்கள். 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டு சென்னை அணி ஐபிஎல் பட்டத்தை கைப்பற்றியது. அதைக் குறிப்பிட்டு பேசிய அவர் தற்போது சீசன் எங்களுக்கு, அடுத்த ஆண்டு எங்களுக்கான ஒரு ஊக்கியாக(எங்களை இன்னும் அதிக அளவில் நன்றாக செயல்படத் தூண்டும் வகையில்) இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்

- Advertisement -