டெல்லி அணிக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் இந்த இரு மாற்றங்களை சென்னை அணி செய்ய தவறினால் பின் விளைவு மோசமாக இருக்கும்

0
136
CSK vs DC

லீக் போட்டிகள் நேற்றுடன் முடிந்துவிட்ட நிலையில் நாளை முதல் பிளே ஆஃப் சுற்று நடைபெற உள்ளது. நாளை நடக்க உள்ள முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்திய சென்னை அணி, கடைசி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து அதனுடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமான கட்டத்தில் சென்னை அணி அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் தோல்வி பெறுவது சாதாரண விஷயமாக பார்க்கக்கூடாது என்று விமர்சகர்கள், வல்லுனர்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். நாளை டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றால், நேராக இறுதி போட்டிக்கு தகுதி அடைந்துவிடும். எனவே நாளைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

இரண்டு முக்கிய மாற்றங்களை அணியில் ஏற்படுத்த வேண்டும்

தற்பொழுது உள்ள சென்னை அணியில் இரு மாற்றங்களை செய்யும் பட்சத்தில் நாளை நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகின்றனர். அந்த இரு மாற்றங்களாக பார்க்கப்படுவது ரெய்னா மற்றும் டொமினிக் ட்ரேக்ஸ்.

டொமினிக் ட்ரேக்ஸ்

சாம் கரனுக்கு மாற்று வீரராக சென்னை அணி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட 23 இளம் வயது ஆல்ரவுண்டர் வீரர் தான் இந்த டொமினிக் ட்ரேக்ஸ். பார்படோஸ்ஸை சேர்ந்த இவர் இதுவரை எந்தவொரு ஐபிஎல் போட்டியிலும் விளையாடியது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் இவர் சர்வதேச அளவில் ஒரு போட்டியில் கூட விளையாடியது கிடையாது. இருப்பினும் இவரை நம்பி சென்னை அணி நிர்வாகம் தேர்ந்தெடுத்ததற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய கதை உள்ளது.

- Advertisement -

சமீபத்தில் நடந்து முடிந்த கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் இவர் சக்கை போடு போட்டு உள்ளார்.கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியோட்ஸ் அணிக்காக விளையாடிய இவர் தன்னுடைய பந்துவீச்சின் மூலம் 11 போட்டிகளில் 16 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். அதேசமயம் பேட்டிங்கில் 160 ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் விளையாடக் கூடிய ஒரு அதிரடி ஹிட்டரும் ஆவார்.

குறிப்பாக இறுதிப்போட்டியில் அந்த அணிக்கு 24 பந்துகளில் 48 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதிப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் இவருக்கே கொடுக்கப்பட்டது. அந்த அணி கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக டொமினிக் பார்க்கப்பட்டார்.

எனவே நாளைய போட்டியில் இவர் ஜோஷ் ஹேசில்வுட் இடத்தில் விளையாடினால் சென்னை அணி சற்று கூடுதல் பலத்துடன் விளையாடும்.

சுரேஷ் ரெய்னா

கடந்த ஓரிரு போட்டிகளில் சுரேஷ் ரெய்னா இடத்தில் ராபின் உத்தப்பா விளையாடியதை நாம் பார்த்தோம். நாளை நடக்க இருக்கும் ஆட்டத்தில் நிச்சயமாக சுரேஷ் ரெய்னா மீண்டும் அணியில் விளையாடி ஆக வேண்டும். முக்கியமான போட்டியில் இவர் இல்லாத சென்னை அணியை நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

அதுமட்டுமின்றி நடப்பு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா ஒரே ஒரு போட்டியில் அரைசதம் குவித்துள்ளார். அந்த ஒரு போட்டி டெல்லி அணிக்கு எதிரான போட்டி என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். எனவே நாளை நடைபெற இருக்கும் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா நிச்சயமாக இடம் பெற்று விளையாடியாக வேண்டும்.