பத்திரானா பழைய மாதிரிதான் இருக்காரு.. ஆனா அவங்க உஷார் ஆனதுதான் இவர் தோல்விக்கு காரணம் – சிஎஸ்கே பவுலிங் கோச்

0
84

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிஎஸ்கே தோல்வி அடைந்த விதம் குறித்து அதன் பந்து வீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே எட்டாவது தோல்வி

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே மிடில் வரிசை பேட்டர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் இறுதிக்கட்டத்தில் யாரும் விளையாடாத காரணத்தால் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்து 19. 2 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக சாம்கரன் 47 பந்துகளை 88 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதில் சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளராக கருதப்படும் மதீஷா பத்திரனா இரண்டு விக்கெட் கைப்பற்றினாலும் 45 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இருப்பினும் அவரது சமீபத்திய செயல்பாடுகள் சிஎஸ்கே அனைத்து போதுமானதாக அமையவில்லை. 18 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு சிஎஸ்கே அவரை தக்க வைத்தாலும் அது அணியின் வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே பவுலிங் கோச் எரிக் சிம்மன்ஸ் அவருக்கு ஆதரவாக சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

அவரை சிறப்பாக விளையாடுகிறார்கள்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “பத்திரனா மீண்டும் தனது பழைய பந்துவீச்சு ஆக்சனுக்கு வந்துவிட்டார் என்று நினைக்கிறேன். மேலும் அவர் பவுலிங் ஆக்ஷனில் துல்லியம் குறைவாக இருக்கிறார் என்று நான் நினைக்கவில்லை. மாறாக பேட்டர்கள் அவரை சிறப்பாக பயன்படுத்தி விளையாடுகிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. அவரது திட்டங்கள் என்ன என்ன செய்யும் வருகிறார் என்பதை பேட்ஸ்மேன்கள் நன்றாக புரிந்து கொள்கிறார்கள்” என்று பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க:8வது தோல்வி.. உங்க சேவை எங்களுக்கு போதும்னு.. அந்த 2 பேரையும் சிஎஸ்கே கட்டாயம் கழட்டிவிடும் – சஞ்சய் பாங்கர் பேட்டி

தனது பத்தாவது போட்டியை விளையாடிய சிஎஸ்கே அணிக்கு இது எட்டாவது தோல்வியாக அமைந்த நிலையில் முதல் அணியாக சிஎஸ்கே பிளே ஆப் சுற்றை விட்டு வெளியேறி இருக்கிறது. கடந்த ஆண்டு பிளே அப் சுற்றுக்கு செல்லவில்லை என்றாலும் ஓரளவு நன்றாக விளையாடியது ரசிகர்களை திருப்தி அடையச் செய்தது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதலே மிகவும் மோசமாக விளையாடி வருவது ரசிகர்களிடையே பெரிய ஏமாற்றத்தை சந்தித்து வருகிறது. எனவே இனிவரும் நான்கு போட்டிகளில் ஆவது வெற்றி பெற்று ஓரளவு நன்றாக சிஎஸ்கே தொடரை முடிக்குமா என்ற பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -