ஐபிஎல் 2025

அவர் மட்டும் இருந்தா கதையே வேற.. 9 முறை 180+ ரன்களை சேஸிங் செய்து கொடுத்த ஜாம்பவான் வீரர்.. மிஸ் செய்யும் ரசிகர்கள்

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நடைபெற்ற 17வது லீக் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்துள்ளது.

- Advertisement -

இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மூன்றாவது தொடர்ச்சியான தோல்வியாகவும் இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கேவின் தொடர் தோல்வி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மற்ற அணிகளை காட்டிலும் மிகவும் பலவீனமான அணியாக இருந்து வருகிறது. தொடக்க வீரர்கள் வலுவாக இருந்தாலும் மிடில் வரிசையில் பவர் ஹிட்டர் பேட்ஸ்மேன்கள் இல்லாதது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. மும்பை அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் 155 ரன்கள் இலக்கை கடைசி ஓவரில் தான் சிஎஸ்கே சேசிங் செய்து வெற்றி பெற்றது.

அதற்குப் பிறகு மூன்று போட்டிகளிலும் இரண்டாவதாக பேட்டிங் செய்த சிஎஸ்கே பெங்களூர் நிர்ணயித்த 196 ரன்கள் இலக்கை அடைய முடியாமல் 146 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியும், அடுத்ததாக நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 182 ரன்கள் இலக்கை சேசிங் செய்ய முடியாமல் 176 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியும், அதற்குப் பின் இன்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 183 ரன்கள் இலக்கை 158 ரன்கள் மட்டுமே எடுத்து 25 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது.

- Advertisement -

ஸ்டார் வீரர் பெரிய மிஸ்ஸிங்

இந்தக் கட்டத்தில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முக்கியமாக மூன்றாவது வரிசையில் களமிறங்கும் சுரேஷ் ரெய்னாவை மிஸ் செய்கிறது. சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய வரை எதிரணி நிர்ணயிக்கும் 180க்கும் அதிகமான ரன்களை 9 முறை நின்று சேசிங் செய்து வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார். அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு வாங்கிய பிறகு சிஎஸ்கே ஒரு முறை கூட 180 ரன்கள் இலக்கை சேசிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தோனி ஓய்வு குறித்த வதந்தி.. மௌனம் கலைத்த ஸ்டீபன் பிளம்பிங்.. குழப்பத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்

கடைசியாக சிஎஸ்கே 2018
ஆம் ஆண்டு 180 ரன்கள் இலக்கை சேஸிங் செய்திருக்கிறது. அதற்குப் பின்னர் 2019ஆம் ஆண்டு முதல் ஒரு முறை கூட சென்னை அணி இந்த இலக்கை வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ் ரெய்னா கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனவே மூன்றாவது வரிசையில் சிஎஸ்கே அணிக்காக பலமுறை வென்று கொடுத்த சுரேஷ் ரெய்னாவை ரசிகர்கள் பெரிய வகையில் மிஸ் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts