தோனி ஓய்வு குறித்த வதந்தி.. மௌனம் கலைத்த ஸ்டீபன் பிளம்பிங்.. குழப்பத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்

0
419

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொந்த மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறப்போவதாக எழுந்த வதந்தி குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தோனி ஓய்வு குறித்த வதந்தி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வி அடைந்திருந்த நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டிக்கு முன்பாக, சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கைவிரலில் காயம் அடைந்திருக்கிறார் எனவும், எனவே அவருக்கு பதிலாக மகேந்திர சிங் தோனி இந்த போட்டியில் கேப்டனாக தலைமை தாங்குவார் என்றும் தகவல்கள் பரவியது. மேலும் போட்டிக்கு முன்பாக சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸி தோனி கேப்டனாக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது என்று சூசகமாக கூறியிருந்தார். மேலும் தோணி கடைசியாக விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் அணி வெற்றி பெறும் வகையில் போதுமான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை.

எனவே இந்த சூழ்நிலையில் தோனி இந்த போட்டியோடு ஓய்வு பெறப் போகிறார் என்று ரசிகர்களால் சமூக வலைதளங்களில் அதிக அளவு தகவல்கள் பரவியது. மேலும் அதனை சற்று உறுதியாக்கும் விதமாக தோனியின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் சேப்பாக்கம் மைதானத்தில் போட்டியை காண்பது போன்ற காட்சிகளும் காண முடிந்தது. இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அது குறித்து எந்த தகவலும் வரவில்லை.

- Advertisement -

முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே கோச்

இந்த நிலையில் தோனி இந்த சீசன் முழுவதும் சென்னை அணிக்காக விளையாடுவாரா? அல்லது தொடரின் பாதியில் தனது ஓய்வு குறித்த முடிவை அறிவிப்பாரா? என்று ரசிகர்கள் குழம்பிப் போயிருக்கின்றனர். சென்னை அணியின் தோல்விக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சிஎஸ்கே கோச் ஸ்டீபன் பிளம்மிங் தோனி ஓய்வு குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிங்க:6வது ஓவருக்கு பின்.. நாங்க அதிரடியாக ஆடாததற்கு காரணம் இருக்கு.. எப்படி பண்ண முடியும் – சிஎஸ்கே ருதுராஜ் பேட்டி

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” மகேந்திர சிங் தோனி ஓய்வு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் அவரோடு இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் இன்னும் தற்போது வலுவாக இருக்கிறார். அதனால் இப்போதெல்லாம் தோனியின் ஓய்வு குறித்த முடிவுகளை நான் கேட்பதில்லை” என்று பிளம்மிங் கூறி இருக்கிறார். இதன் மூலமாக தோனி தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணத்தில் இல்லை என்று பிளமிங் பேசியதன் மூலமாக தெரிகிறது. எனவே சிஎஸ்கே ரசிகர்கள் தற்போது நிம்மதி பெரும் மூச்சு அடைந்துள்ளனர்.

- Advertisement -