சேப்பாக்: சிஎஸ்கே குஜராத் போட்டி டிக்கெட் விலை அதிரடி குறைப்பு.. விற்பனை தேதி அறிவிப்பு

0
29
CSK

இன்று மிகக் கோலாகலமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 17வது ஐபிஎல் சீசன் துவங்குகிறது. முதல் போட்டியில் ருதுராஜ் கேப்டனாக தலைமை தாங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாப் டு பிளிசிஸ் கேப்டனாக தலைமை தாங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்தப் போட்டி மிகச் சரியாக இந்திய நேரத்தில் இரவு 7:30 மணிக்கு துவங்குகிறது.

ஐபிஎல் தொடரில் மிக அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் அணிகளில் முக்கியமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களுக்கும் மிகப்பெரிய அளவில் கவனம் கிடைக்கும். பல நேரங்களில் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சந்தை மதிப்பை உயர்த்தி வந்திருக்கிறது. ஆனால் சில நேரங்களில் சில நெருக்கடிகளையும் உண்டாக்கி இருக்கிறது.

- Advertisement -

ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் போதும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிக்கு டிக்கெட் குறித்தான சர்ச்சைகள் கிளம்பி கொண்டே இருக்கும். கடந்த முறை டிக்கெட் விற்பனை நேரில் நடைபெற்றது. அப்பொழுது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டார்கள். ஆனால் அவர்களுக்கான பாதுகாப்பு குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் என எதுவுமே சரிவர செய்யப்படவில்லை. இது சமூக வலைதளத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது.

இந்த நிலையில் இதை தடுக்கும் பொருட்டு இந்த வருடம் எல்லா டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் விற்பனை செய்வது என முடிவு செய்யப்பட்டது. 1700 ரூபாயில் ஆரம்பித்து 7500 வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டது. ஆனால் இதிலும் ஒரு பிரச்சனையாக, டிக்கட்டுக்கு பதிவு செய்யும் ஆன்லைன் தளத்தில் கோளாறு ஏற்பட்டு, பெரிய அளவில் பிரச்சனைகள் உண்டானது. சம்பந்தப்பட்ட நிறுவனம் இது குறித்து மன்னிப்பு கேட்டிருக்கிறது.

இன்று நடைபெறும் போட்டிக்கு அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மார்ச் 26 ஆம் தேதி விளையாடுகிறது. இதற்கு அடுத்து டெல்லிக்கு எதிராக மார்ச் 31ஆம் தேதி வெளியில் சென்று விளையாடுகிறது.

- Advertisement -

அதிரடி விலை குறைப்பு

தற்பொழுது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் போட்டிக்கான டிக்கெட் கட்டணங்கள் திடீரென குறைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் போட்டிக்கான டிக்கெட்டுகள் 23ஆம் தேதி காலை முதல் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. போட்டிக்கான டிக்கெட் கட்டண விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : தோனி பாய் போன வருஷமே ஒன்னு சொன்னார்.. நான் எதையும் மாத்த மாட்டேன் – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி

சி, டி, இ லோயர் – ₹1700
ஐ, ஜே, கே அப்பர் – ₹2500
ஐ, ஜே, கே லோயர் – ₹4000
சி, டி, இ அப்பர் – 3500
கேஎம்கே டெரஸ் – ₹6000, இதில் 4500 மற்றும் இறுதி விலையாக 7500 என்று இருந்த விலைகளை குறைத்து மாற்றி அறிவித்திருக்கிறார்கள். இந்த முறை ஆன்லைன் விற்பனை தளத்தில் பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.