சி.எஸ்.கே அணியில் இருந்து விலகிய ஆடம் மில்னே ; மாற்று வீரரை அறிவித்துள்ள சென்னை நிர்வாகம்

0
3364
Adam Milne CSK

2022 ஐ.பி.எல் பதினைந்ததாவது சீசன், 2020 பதின்மூன்றாவது சீஸனை விட, சென்னை அணிக்கு மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. ஒருபுறம் தீபக்சாஹர் காயமடைந்தது சென்னை அணிக்கு, மிகப்பெரிய சரிவாக அமைந்தது.

ஐ.பி.எல் தொடர் வரலாற்றில் முதல் இரண்டு ஆட்டங்களில் இதுவரை தோற்றதில்லை என்கிற வரலாறோடு கம்பீரமாக இந்தத் தொடருக்குள் வந்த சென்னை அணி, முதல் நான்கு ஆட்டங்களைத் தொடர்ந்து தோற்று, சென்னை அணி இரசிகர்களுக்குப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது.

- Advertisement -

இத்தோடு, அணியின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு, சென்னை அணிக்கு மட்டுமல்லாது, ஐ.பி.எல் தொடரின் வெற்றிக்கரமான கேப்டனான மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது இன்னொருபுறம் இரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.

தீபக் சாஹர் காயமடைந்திருக்க, சர்வதேச அனுபவம் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவை வைத்துச் சமாளிக்கலாம் என்றிருந்த சென்னை அணிக்கு, ஆடம் மில்னேவின் காயம் பெரிய பின்னடைவாக அமைந்தது.

ஆடம் மில்னேவின் காயம் எப்படிப்பட்டது? அவர் இனி எப்போது ஆடுவார்? என்ற கேள்விகளுக்கெல்லாம், இதுவரையில் பதில் கிடைக்காமல் இருந்த வேளையில், தற்போது ஆடம்மில்னே இனி ஆடமாட்டார், தொடரிலிருந்து வெளியேறுகிறார் என்கின்ற செய்தி வந்திருக்கிறது.

- Advertisement -

மேலும் ஆடம்மில்னேவிற்குப் பதிலாக, 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடரில், இலங்கை அணிக்காக இருமுறை பங்கேற்றுள்ள மதிஷா பதிரணாவை தேர்வு செய்துள்ளதாக, சி.எஸ்.கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இவர் இலங்கையின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா போலவே பந்துவீசக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது!