வேற சம்பவமே இல்லையா.. பிளமிங் எங்கள அவமானப்படுத்திட்டாரு – சிஎஸ்கே ரசிகர்கள் கோபம்

0
67
Fleming

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேச்சு சிஎஸ்கே ரசிகர்களை கடுமையாக கோபம் அடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில் நேற்றும் அவருடைய ஒரு குறிப்பிட்ட கருத்து சிஎஸ்கே ரசிகர்களை கோபம் அடைய வைத்திருக்கிறது.

இன்று சிஎஸ்கே அணி தங்களது சொந்த மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறார்கள். இந்த போட்டிக்கு முன்பாக வழக்கமான பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட ஸ்டீபன் பிளமிங் சில முக்கியமான விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

பிளமிங்கின் முதல் சர்ச்சை பேச்சு

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் பிளம்மிங் ஒரு முறை பேசும் பொழுது சிக்ஸர்கள் அடிப்பதைவிட பவுண்டரிகள் அடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இந்திய இளம் வீரர்கள் முதல் பந்தில் இருந்து அடிக்க செல்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், கடினமான ஆடுகளங்களில் அவர்களால் ஆட்டம் நுணுக்கம் இல்லாததால் எதுவும் செய்ய முடியாமலும் போகலாம் என்றும் பேசி இருந்தார்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் இருந்த சிறந்த இளம் வீரர்களை வாங்காமல் தற்போது இளம் வீரர்கள் மேலயே பிளமிங் குறை சொல்லி பேசியது சிஎஸ்கே ரசிகர்களை கோபமடைய வைத்தது. இதன் காரணமாக முதலில் இவரை அணியை விட்டு நீக்கிவிட்டு புதிய பயிற்சியாளரை கொண்டுவர வேண்டும் என ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்தார்கள்.

- Advertisement -

மீண்டும் சிக்கிய பிளமிங்

இந்த நிலையில் நேற்று பேசிய பிளம்மிங் கூறும் பொழுது “அடுத்து வரும் ஆறு போட்டிகளையும் வென்று நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்வோம் என்கின்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இருந்து எப்படி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்கின்ற ப்ளூ பிரிண்ட்டை கடந்த ஆண்டு ஆர்சிபி அமைத்துக் கொடுத்திருக்கிறது” என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க : ஒரே ஆளாக மேட்சை திருப்பிய ஹேசில் வுட்.. விராட் கோலி தரமான ஆட்டம்.. ராஜஸ்தானை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்சிபி

சிஎஸ்கே தலைமை பயிற்சியாளரின் இந்த பேச்சுக்கு அந்த அணியின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி இப்படியான நிலையில் இருந்து வென்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் கோப்பையையும் வென்றது. உதாரணம் சொல்வதற்கு நம்மிடமே சம்பவம் இருக்கும்போது, எதிரி அணியான ஆர்சிபியை உதாரணம் வைத்து பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது என சிஎஸ்கே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஸ்டீபன் பிளமிங்கை இந்த ஆண்டுடன் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -