இன்று சிஎஸ்கே அணி தங்களது சொந்த மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஒரு சாதாரண விஷயத்தில் பெரிய தவறு செய்திருப்பதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்து வருகிறார்கள்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இரண்டுமே புள்ளி பட்டியலில் மிகவும் மோசமான நிலையில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கின்றன. இந்த நிலையில் இன்று சிஎஸ்கே அணி நிறைய மாற்றங்களை செய்திருந்தது. ஆனால் புத்திசாலித்தனமான வகையில் பிளேயிங் லெவனை உருவாக்கவில்லை.
சிஎஸ்கே அணி இன்று பேட்டிங் வரிசையை 8 வரையில் வைத்திருந்தது. அதே சமயத்தில் சிஎஸ்கே அணி இன்று முதலில் பேட்டிங் செய்தது. விஜய் சங்கர் இடத்தில் தீபக் ஹூடா பிளேயிங் லெவனில் இடம் பெற்று இருந்தார். மேலும் இம்பேக்ட் பிளேயர் இடத்திற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் இருவரும் இடம் பெற்று இருந்தார்கள்.
இதைத் தவிர்த்து ரச்சின் ரவீந்தரா மற்றும் ஜேமி ஓவர் டன் இருவரும் நீக்கப்பட்டு, சாம் கரன் மற்றும் டிவால்ட் பிரிவியஸ் இருவரும் இடம் பெற்றார்கள். இந்த மாற்றங்கள் சிஎஸ்கே ரசிகர்களை ஓரளவுக்கு மகிழ்ச்சி அடைய வைத்திருந்தது. அதே சமயத்தில் இம்பேக்ட் பிளேயர் விஷயத்தில் சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்கின்ற காரணத்தினால் ஒரு புத்திசாலித்தனமான விஷயத்தை செய்யாமல் விட்டதை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இன்று சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்கின்ற நிலையில் பேட்டிங் யூனிட்டில் தீபக் ஹூடா ஏழாவது இடத்தில் களம் இறங்கினார். அதே சமயத்தில் இம்பேக்ட் பிளேயராக அன்சூல் காம்போஜ் கொண்டுவரப்பட்டார். இங்குதான் டாப் ஆர்டரில் மூன்று இடது கை பேட்ஸ்மேன்களை வைத்திருக்கும் ஹைதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே தவறு செய்து விட்டது.
இதையும் படிங்க: சிக்ஸர் மழையை பொழிந்த ப்ரெவிஸ்.. ஐபிஎல் 2025-ன் அபார கேட்சை பிடித்து வெளியேற்றிய கமிந்து மெண்டிஸ்.. CSK vs SRH
இந்த நிலையில் தீபக் ஹூடாவை இம்பேக்ட் பிளேயர் லிஸ்டில் வைத்துவிட்டு, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அன்சூல் காம்போஜ் இருவரையும் பிளேயிங் லெவனில் வைத்திருந்தால், ஒருவேளை குறைந்த விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே 20 ஓவர்களை விளையாடி முடித்திருந்தால், அஸ்வின் மற்றும் அன்சூல் காம்போஜ் இருவரையும் விளையாட வைத்திருக்க முடியும். ஒருவேளை தற்போது போல சிஎஸ்கே விக்கெட்டுகளை சீக்கிரத்தில் இழந்து இருந்தாலும், அஸ்வினை வெளியே அனுப்பிவிட்டு தீபக் ஹூடாவை இம்பேக்ட் பிளேயராக கொண்டு வந்திருக்கலாம். எல்லா அணிகளும் இப்படி புத்திசாலித்தனமாக செயல்படுகின்ற நிலையில் சிஎஸ்கே இதை கோட்டைவிட்டதை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்