ஐபிஎல் 2025க்கான மெகா ஏலம் இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கும் நிலையில், ஒவ்வொரு அணியும் இந்த மெகா ஏலத்துக்கு தயாராகி வருகின்றன. ஒவ்வொரு அணியும் சிறந்த வீரர்களை வாங்க அதற்கான பட்டியலை தயார் செய்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் மெகா ஏலத்தில் பெரிய இந்திய பெயர்களை வாங்க முயற்சிப்பதாகவும், எதிர்கால சிஎஸ்கே கேப்டன் குறித்தும் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
விரைவில் ஐபிஎல் மெகா ஏலம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனி தலைமையில் இதுவரை ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்று ஒரு அசைக்க முடியாத அணியாக ஐபிஎல் தொடரில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு மகேந்திர சிங் தோனி தனது கேப்டன் பதவியை விட்டு விலகி அவருக்கு பதிலாக இளம் வீரரான ருத்ராஜிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். அவரும் ஓரளவு கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நன்றாக செயல்பட்டார்.
இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக டெல்லி அணி தனது ஆஸ்தான கேப்டனான ரிஷப் பண்ட்டை தக்க வைக்காமல் வெளியே விட்டது. இந்த நிலையில் சிஎஸ்கே முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தோனி பண்டுடன் உரையாடியதாகவும், விரைவில் அவர் சிஎஸ்கே ஜெர்சியை அணிவார் என்றும் ஆச்சரியமான தகவலை வெளியிட்டார். ஒருவேளை அவர் சிஎஸ்கே அணிக்குள் நுழைந்தால் எதிர்கால கேப்டன் ஆகவும் அவர் இருப்பார் என்ற கருத்துக்களும் தற்போது நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் சென்னை அணியின் சிஇஓ காசி விசுவநாதன் அம்பாதி ராயுடு உடனான ஒரு பேட்டியில் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
சிஎஸ்கேவின் எதிர்கால கேப்டன்
அதில் காசி விஸ்வநாதன் கூறும்போது “நாங்கள் எங்களது அணியில் பெரிய வீரர்களை தக்கவைத்திருப்பதால் ஏலத்திற்கு சிறிய தொகையுடன் செல்வோம் என்பது எங்களுக்கு தெரியும். அதாவது சிறந்த இந்திய வீரர்களை பெறுவதற்கு மற்ற அணிகளோடு போட்டியிட முடியாது. ஏலத்திற்கு வருபவர்கள் யார் என்பதும் உங்களுக்கு தெரியும். அதனால் நாங்கள் முடிந்தவரை முயற்சி செய்யலாம் ஆனால் ஏலம் எளிதாக இருக்கும் என்று தோன்றவில்லை.
இதையும் படிங்க:இந்த மோசமான ரெக்கார்ட கோலி வச்சிருக்காரு.. ஆனா ஜாம்பவான யாரும் கேள்வி கேட்க மாட்டீங்க.. – பாண்டிங் பேட்டி
ஆனால் சிறந்த வீரர்களை போட்டித் தன்மையுடன் நமது அணியில் சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால் சிறந்த வீரர்களை சிஎஸ்கே அணியில் கொண்டு வர முயற்சிப்போம். நாங்கள் எப்போதும் ஒரு செயல் முறையை பின்பற்றுவோம் என்று உங்களுக்கு தெரியும். சிஎஸ்கே அணியின் எதிர்கால கேப்டன் குறித்து கூற வேண்டும் என்றால் ருத்ராஜ் தோனியை போலவே அதே அச்சில் வரும் கேப்டனாக இருக்கிறார். அவரும் மிக அமைதியானவர். எனவே எங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் வகையில் செயல்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






