ஐபிஎல் 2025 சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், தக்க வைப்பு வீரர்களுக்கான விபரம் குறித்து ஐபிஎல் நிர்வாகம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் ஆறு வீரர்களை மொத்தமாக ஒரு அணி தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் அதில் குறிப்பாக ஒரு வீரர் அன்கேப்டு பிளேயராக இருக்க வேண்டியது கட்டாயம் என்றும் அறிவிப்பை வெளியிட்டது.
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விசுவநாதன் இந்த விதிமுறையை தோனிக்கு பயன்படுத்துவது குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
மகேந்திர சிங் தோனி கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த ஐபிஎல் தொடரில் தனது கேப்டன் பதவியையும் துறந்து இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட்டுக்கு அந்த வாய்ப்பினை வழங்கி அவரை பின் நின்று வழிநடத்தவும் செய்தார். தோனிக்கு தற்போது 43 வயது ஆவதால் காயத்தை கருத்தில் கொண்டு அவர் அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் நிலவியது.
இந்த நிலையில் தோனி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ஐபிஎல் தக்கவைப்பு வீரர்களின் பட்டியலைப் பொருத்து விளையாடுவது குறித்து முடிவு செய்வேன் என்று கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில் ஐபிஎல் நிர்வாகமும் ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பை வெளியிட, தோனி அன் கேப்டு பிளேயராக அறிவிக்கப்பட்டால் ரூ.4 கோடி ரூபாய்க்கு அவரை எளிதாக சென்னை அணி தக்க வைத்துக்கொள்ளும். மேலும் இளம் வீரர்களையும் அந்த தொகைக்கு வாங்க முடியும்.
இந்த சூழ்நிலையில் தோனிக்கு அன்கேப்டு விதிமுறை பயன்படுத்தப்படுமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியதாவது “அது குறித்து சிந்திக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இப்போது இல்லை. எம் எஸ் தோனிக்கு கூட நாங்கள் இந்த விதிமுறையை பயன்படுத்தாமல் போகலாம். இது குறித்து நாங்கள் அவருடன் கலந்துரையாடவில்லை என்பதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவர காலதாமதம் ஏற்படலாம்.
தோனி அமெரிக்காவில் இருப்பதால் நாங்கள் இதுகுறித்து அவரிடம் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இப்போது நானும் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதால் வரும் வாரத்தில் அது குறித்து பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறோம். அதனால் ஒரு தெளிவு இருக்கலாம். மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் அது குறித்த முடிவை தோனியை வெளியிடுவார்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:மனசாட்சியே இல்லையா?.. கோலி கூட எங்க பாபரை கம்பேர் பண்ணாதிங்க.. காரணம் இதான் – பாக் ஜாகிர் அப்பாஸ் விமர்சனம்
இருப்பினும் மகேந்திர சிங் தோனி இன்னும் ஒரு சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என்று ரசிகர்கள் கிரிக்கெட் விமர்சகர்க்கள் பெரிதும் நம்புகின்றனர் என்பது குறிப்பிடப்பட்டது. மேலும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ஐபிஎல் உரிமையாளர்கள் தக்கவைப்பு பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.