ஏலத்தில் டு பிளசிஸை எடுக்காததற்கு இதுதான் காரணம் – வருத்தம் தெரிவித்துள்ள சென்னை தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன்

0
11429
Kasi Vishwanathan about Faf du Plessis

வரும் 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் ஏலம் தற்போது நடந்து முடிந்துள்ளது. பல முன்னணி வீரர்களை 10 அணிகளும் போட்டி போட்டு வாங்கி உள்ளனர். 10 அணிகள் இந்த முறை கலந்துகொள்வதால் அதிக வீரர்கள் இந்த முறை ஏலத்தில் விலை போய் உள்ளனர். வரும் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டிக்கு தயாராகி கொண்டிருந்தாலும் தேசத்தின் மொத்த கவனமும் ஐபிஎல் ஏலத்தின் மீதே உள்ளது.

ஐபிஎல் தொடரின் முக்கிய அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை 4 முறை இந்த அணி ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றியுள்ளது. மேலும் ஒரே ஒருமுறை மட்டும் தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சென்னை அணி வெளியேறி உள்ளது. வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் தோனி. இவர் நீண்ட காலம் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து பல முக்கிய கோப்பைகளைக் பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கூடவே சென்னை அணிக்கு நீண்ட காலமாக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணியின் பாப் டூப்ளெசிஸும் மிக முக்கிய காரணம்.

- Advertisement -

ஏலத்தில் டு பிளசிஸை எடுக்காததற்கு இதுதான் காரணம்

பல ஆண்டுகளாக சென்னை அணிக்கு விளையாடி வரும் இவர், டாப் ஆர்டரில் இறங்கி சென்னை அணிக்காக பல சிறப்பான ஆட்டங்களில் விளையாடி உள்ளார். பல முக்கிய நாக்-அவுட் போட்டிகளிலும் இவர் நிதானமாக விளையாடி அந்த அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் தனி ஒருவராக நின்று சென்னை அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார் இவர். கடந்த ஆண்டு அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் இவர் இரண்டாமிடம் பிடித்தார்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த டூப்ளெசிஸை சென்னை அணியால் இந்த முறை தக்க வைக்க முடியவில்லை. இருந்தாலும் நிச்சயம் ஏலத்தில் இவரை திரும்ப சென்னை அணி எடுத்து விடும் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் அவரை பெங்களூர் அணி எடுத்துக் கொண்டது. இது குறித்து பேசிய சென்னை அணியின் சிஇஓ, “டூப்ளெசிஸை இழந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக எங்களுக்காக விளையாடியவரை இழப்பது மிகவும் வருத்தம்” என்று பேசியுள்ளார். பெரும்பாலும் 5 கோடிக்கு மேல் சென்னை அணி கையை உயர்த்தவில்லை. டூப்ளெசிஸ் 7 கோடிக்கு சென்றதால் அவரை வாங்க இயலவில்லை என்று தெரிவித்துள்ளார். இப்போதைக்கு ‘ பட்ஜெட் ‘ ஒன்று தான் காரணம் என்று சென்னை நிர்வாகம் கூறியுள்ளது தவிர வேற எந்த பிரச்சனையும் அல்ல. டூப்ளெசிஸ் இல்லாமல் இந்த முறை ஐபிஎல் தொடரில் சென்னை அணி எவ்வாறு விளையாடப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.