எனக்கு இந்த விஷயம் சந்தோசமா இருக்கு.. ரச்சின் தடுமாறியது இதனால்தான் – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி

0
1304
Dhoni

இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், சிஎஸ்கே அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை நடப்பு ஐபிஎல் தொடரில் பெற்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் 52, ரிஷப் பண்ட் 51, பிரித்திவிஷா 43 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் டெல்லி அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே அணியின் பந்து வீச்சு தரப்பில் மதிஷா பதிரனா மூன்று விக்கெட் 31 ரன்களுக்கு கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணிக்கு ரகானே 45, டேரில் மிட்சல் 37 ரன்கள் எடுத்தார்கள். கடைசி கட்டத்தில் வந்த தோனி அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். சிஎஸ்கே அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதைத்தொடர்ந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது. பவர் பிளேவில் மூன்று ஓவர்கள் பந்து வீசி இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது ஆட்டநாயகன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

தோல்விக்குப்பின் பேசிய சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் “எங்கள் பந்துவீச்சாளர்கள் முதல் ஆறு ஓவர்களுக்கு பிறகு ஆட்டத்தில் திரும்பி வந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களை 190 ரண்களில் கட்டுப்படுத்தியது நல்ல பந்துவீச்சு முயற்சியாக அமைந்தது. அவர்கள் பேட்டிங் செய்யும்பொழுது விக்கெட் ஒரு அளவுக்கு நன்றாக இருந்தது. நாங்கள் பேட்டிங் செய்யும்பொழுது கிரிக்கெட்டில் சீம் மற்றும் மூவ்மெண்ட் இருந்தது. மேலும் விக்கெட்டில் கொஞ்சம் பவுன்சும் இருந்ததால்தான் ரச்சின் ரவீந்தராவால் பந்தை கனெக்ட் செய்ய முடியவில்லை.

இதையும் படிங்க : 128 டெசிபல்.. 231 ஸ்ட்ரைக் ரேட்.. அதிரவிட்ட வின்டேஜ் தோனி.. சிஎஸ்கேவை வீழ்த்தி டெல்லி வெற்றி

இதன் காரணமாக எங்களால் பேட்டிங் செய்யும்பொழுது பவர் பிளேவில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்த போட்டியில் நாங்கள் எப்பொழுதும் பின்தங்கியே இருந்தோம். பந்துவீச்சில் முதல் சில ஓவர்கள் நன்றாக பந்து வீசினோம். பவர் பிளேவின் கடைசி இரண்டு ஓவர்களில் நிறைய ரன்கள் விட்டுக் கொடுத்து விட்டோம். இரண்டு வெற்றிகளுக்கு பிறகு ஒரு தோல்வி வரலாம். இதனால் கவலைப்பட வேண்டியது இல்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -