என்னால் இந்த தோல்வியை ஏற்க முடியல.. நான் மெதுவா பேட்டிங் பண்ணதுக்கு இதுதான் காரணம் – ருதுராஜ் விளக்கம்

0
4
Ruturaj

நேற்று சிஎஸ்கே அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தத் போட்டியில் தோல்வி ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே தனது முதல் போட்டியில் பேட்டிங் சரியில்லாமல் தோல்வியடைந்தது. நேற்றைய போட்டியில் 209 ரன்கள் குவித்தும் 18வது ஓவரிலேயே எதிரணியை எளிதாக வெல்ல வழிவிட்டது. தற்போது பேட்டிங் பவுலிங் என இரண்டு துறைகளிலும் சிஎஸ்கே பலவீனமாக உள்ளது.

- Advertisement -

ஆடுகளம் இப்படித்தான் இருந்தது

இது குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேசும் பொழுது ” இந்த போட்டியில் ஆடுகளம் வேகப்பந்து வீ ச்சாளர்களுக்கு சாதகமாக காணப்பட்டாலும் கூட பந்து கொஞ்சம் கிரிப் ஆகி வந்தது, மேலும் மெதுவான பந்துகளும் கிரிப் ஆனது. எனவே நாங்கள் 200 ரன்கள் தாண்டி எடுத்ததால் எனக்கு நம்பிக்கை இருந்தது”

“இடையில் அவர்களும் 11 ரன்கள் ஓவருக்கு எடுக்க வேண்டி இருந்தது. அந்த நேரத்தில் எங்களுக்கு இரண்டு நல்ல ஓவர்கள் தேவைப்பட்டது. நாங்கள் அதைச் செய்திருந்தால் அவர்கள் 12 இல்லை 13 ரன்கள் ஒரு ஓவருக்கு எடுக்க வேண்டி நிலைமை மாறி இருக்கும். ஆனால் எங்களால் போட்டியில் மொமண்டத்தை கொண்டு வர முடியவில்லை”

- Advertisement -

மெதுவாக ஆடக் காரணம்

“இந்த தோல்வியை ஏற்பதற்கு கடினமாக இருக்கிறது. அதே நிலையில் இந்த போட்டியில் சில பாசிட்டிவான விஷயங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன. ஆயுஸ் மத்ரே மற்றும் சிவம் துபே இருவர் பேட்டிங் எனக்கு மிகவும் நம்பிக்கை கொடுப்பதாக இருக்கிறது”

இதையும் படிங்க : கேப்டன் ருதுராஜின் மனதிற்குள் அது இன்னும் ஓடிட்டு இருக்கு.. அதான் இப்படி அவர் பேட்டிங் செய்ய காரணம் – ரவிச்சந்திரன் அஸ்வின்

“இன்று நான் கொஞ்ச நேரம் கிரிசில் தங்க வேண்டும் என்று நினைத்தேன். ஆடுகளத்தில் பந்து கிரிப் ஆகி வந்த காரணத்தினால், கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்டு தாக்கி விளையாட நினைத்தேன். ஆனால் நான் தவறான நேரத்தில் ஆட்டம் இழந்து விட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -