நாங்க ஒரு விஷயத்தை தொடர்ந்து உள்ளுக்குள்ள பேசுறோம்.. கவனிச்சீங்களா இன்னைக்கு அந்த தப்பை செய்யல – ருதுராஜ் பேட்டி

0
17
Ruturaj

சிஎஸ்கே அணி தொடர்ந்து சேப்பாக்கத்தில் ஆறு போட்டிகளாக தோற்று வந்தது. இந்த நிலையில் இன்று டெல்லி அணிக்கு எதிராக வெற்றி பெற்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த போட்டி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் 56 பந்தில் 115 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய டெல்லி 189 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. சிஎஸ்கே 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

- Advertisement -

இங்கு வந்து பேசுவது மகிழ்ச்சி

இந்த போட்டி குறித்து பேசி உள்ள ருதுராஜ் கூறும்போது ” இந்த போட்டியில் வெற்றி பெற்று இங்கு வந்து பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. நான் முன்பே சொன்னேன் நாங்கள் பேட்டிங்கில் நல்ல விதமாகவே இருக்கிறோம் என்று. கடந்த போட்டியில் கூட நாங்கள் 210 ரன்கள் தாண்டி எடுப்போம். மேலும் இங்கு ஆடுகளம் மெதுவாக ஆரம்பத்தில் இருந்த போது கூட நாங்கள் மீண்டும் அதே ரன்கள் எடுத்து இருக்கிறோம்”

“சஞ்சு சாம்சஙன் டெல்லி பௌலர்கள் மீது நேரடியாக தாக்குதல் நடத்திய ரன்கள் எடுத்துக் கொடுத்தார். அவர் விளையாடிய விதம் மிகவும் அற்புதமாக இருந்தது. ஆயுஷ் விளையாடிய விதமும் அற்புதமானது. அதே சமயத்தில் இன்றைக்கு எங்களுடைய பௌலிங் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது”

- Advertisement -

இதைத்தான் பேசுகிறோம்

” எங்கள் அணியின் பந்துவீச்சில் எக்ஸ் ஃபேக்டர் இல்லைதான். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் எப்படி பயனுள்ள வகையில் இருப்பது, எவ்வாறு முன்கூட்டியே சிந்தித்து செயல்படுவது, குறைந்தபட்சம் ஒரு பௌண்டரியை தடுப்பது எப்படி என்று நாங்கள் பேசி வருகிறோம். தற்காப்பாக ஃபீல்டு செட்டப் செய்திருந்தாலும், மனதில் தாக்குதலாக பந்துவீச்சில் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம்”

இதையும் படிங்க : என் சதத்தை நான் பிளமிங்குக்கு அர்ப்பணிக்கிறேன்.. 3 மேட்ச் தோத்தும் கூட 50 வினாடிகள் மட்டுமே மீட்டிங் நடந்தது – சஞ்சு சாம்சன் பேட்டி

“கடந்த சில போட்டிகளாக வெற்றிக்கு நெருக்கத்தில் இருந்தோம். ஆனால் ஒன்று அல்லது இரண்டு ஓவர்களில் 20க்கும் மேற்பட்ட ரன்கள் சென்றது. இந்த முறை நாங்கள் அந்த தவறை செய்யவில்லை. பவர் பிளேவில் தவறுகள் ஏற்பட்டபோதும் நாங்கள் திரும்பி வந்து சென்றோம். இன்று வெற்றிக்கு பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -