ஐபிஎல் 2025

6வது ஓவருக்கு பின்.. நாங்க அதிரடியாக ஆடாததற்கு காரணம் இருக்கு.. எப்படி பண்ண முடியும் – சிஎஸ்கே ருதுராஜ் பேட்டி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான 17 வது ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரில் சென்னை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

- Advertisement -

இந்த நிலையில் சென்னை அணி தோல்வி அடைந்த விதம் குறித்து சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்குவாட் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

சிஎஸ்கே ஹாட்ரிக் தோல்வி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்டு 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் ஆடுகளத்தின் சூழ்நிலையை புரிந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 51 பந்துகளை எதிர்கொண்டு 77 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. 5.3 ஓவர்களில் 41 ரன்கள் 3 முக்கிய விக்கெட்டுகள் இழந்ததால் சென்னை அணியால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. மெதுவான ஆட்டம் விளையாடிய விஜய் சங்கர் 54 பந்துகளை எதிர் கொண்டு 69 ரன்கள் குவித்தார். மேலும் மகேந்திர சிங் தோனியும் 26 பந்துகளை எதிர்கொண்டு 30 ரன்கள் எடுத்து மெதுவான ஆட்டத்தை விளையாடியதால் இறுதியில் சிஎஸ்கே 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே குவித்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

பவர் ப்ளேவிலேயே தோற்று விட்டோம்

தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கூறும் போது “கடைசி சில ஆட்டங்களில் எங்களுக்கு எதுவுமே சரியாக அமையவில்லை. நாங்கள் முன்னேற முயற்சிக்கிறோம், சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறோம். ஆனால் ஆட்டம் எங்கள் வழியில் செல்லவில்லை. நிச்சயமாக பவர் பிளேவில் அதிக விக்கெட்டுகளை இழக்கிறோம். மேலும் பந்துவீச்சு துறையிலும் கவலை இருக்கிறது. கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் கொடுக்கிறோம். பவர் பிளேவில் யார் பந்து வீசினாலும் அது சற்று கவலை அளிக்கும் விதத்தில் அமைகிறது. பேட்டிங் பொருத்தவரை நீங்கள் கூடுதலாக ஒரு விக்கெட் இழக்க விரும்ப மாட்டீர்கள்.

இதையும் படிங்க:16வது ஓவரே தோல்வியை ஒப்புக்கொண்ட தோனி விஜய் சங்கர்.. புள்ளி பட்டியலில் தொடரும் சோகம்.. சிஎஸ்கே மீண்டும் தோல்வி

அணியைப் பொறுத்தவரை அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் அதுவே முக்கியம். எங்கள் பேட்டிங்கில் அதிரடி இல்லாதது குறித்து கூறினால், பவர் பிளேவிலிருந்து நாங்கள் மிகவும் பின்தங்கிய முறையில் விளையாடி வந்தோம். பவர்பிளே முடிவில் அதிக விக்கெட் இழந்ததால் எங்களிடம் ஒரே ஒரு பேட்ஸ்மேன் மட்டுமே எஞ்சி இருந்தார். அதனால் போட்டியை அதிரடியாக எடுத்துச் செல்ல முடியவில்லை. டெல்லி அணி ஆடுகளத்தின் சூழ்நிலையை புரிந்து கொண்டு நன்றாக விளையாடியது. சிவம் தூபே பேட்டிங் செய்து கொண்டிருந்த போது கூட, நாங்கள் வேகத்தை எதிர்பார்த்தோம் ஆனால் அது நடக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts