0.98 மீட்டர்.. இடுப்புக்கு மேல் போயும் தோனிக்கு நோ பால் தராத நடுவர்.. ஐபிஎல் விதி சொல்வது என்ன.?

0
1987
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனி பேட்டிங் செய்த பொழுது பெர்குஷன் வீசிய பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மூன்றாவது நடுவர் அதை நோ-பால் இல்லை என அறிவித்தார். இது குறித்து ஐபிஎல் விதி என்ன கூறுகிறது? என்று பார்க்கலாம்.

இன்று இந்த இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த போட்டியில் சிஎஸ்கே அணி இறுதியாக 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த நேரத்தில் மிக முக்கியமான ஒரு நோ-பால் கொடுக்கப்படாதது குறித்து சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கள நடுவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

தோனி களம் இறங்கிய தருணம்

இந்த போட்டியில் தோனி களம் இறங்கிய பொழுது ஒரு ஓவருக்கு 20 ரன்கள் பக்கம் தேவைப்படுகின்ற சூழ்நிலை உருவாகி இருந்தது. இந்த நிலையில் தோனி இந்த முறை கொஞ்சம் சீக்கிரத்தில் வந்து, எடுத்தவுடன் அதிரடியிலும் ஈடுபட ஆரம்பித்தார். இதன் காரணமாக மீண்டும் ஒரு முறை தோனியின் சிறப்பு பினிஷிங் வரப்போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

இந்த நிலையில் கடைசி 20 பந்துகளில் 56 ரன்கள் தேவை என்கின்ற நிலை இருந்தது. அப்போது பெர்குஷன் பந்து வீசிக் கொண்டு இருந்தார். அவர் வீசி அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் தோனி சிக்ஸர் அடித்தார். ஆறாவது பந்து ஃபுல் டாஸ் ஆக இடுப்பு உயரத்திற்கு வர தோனி அதையும் சிக்சர் அடித்தார். கள நடுவர் பந்தை நோ-பால் என அறிவித்தார். அந்த நேரத்தில் திடீரென 19 பந்துக்கு வெற்றிக்கு 43 ரன்கள் தேவை என்கின்ற நிலை உருவானது. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அப்பீலுக்கு சென்ற பொழுது மூன்றாவது நடுவர் அதை நோபால் இல்லை என அறிவித்தார்.

- Advertisement -

ஐபிஎல் விதி என்ன சொல்கிறது?

இந்த நிலையில் மூன்றாவது நடுவரின் அறிவிப்பு மைதானத்தில் பெரிய பரபரப்பை உருவாக்கியது. மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் இது மோசமான தீர்ப்பு என வெளிப்படையாக கத்தினார்கள். ஆனால் கிரிக்கெட் வர்ணனையில் இருந்தவர்கள் இறுதியாக இது ஐபிஎல் விதியின்படி தரப்பட்டு இருக்கிறது என்று கூறினார்கள்.

இதையும் படிங்க : 3 ஓவர்கள்.. சிஎஸ்கே செய்த மோசமான காரியம்.. டீமையே கலைச்சிடுங்க.. ரசிகர்கள் கோபம்

தற்போது இந்த நோ-பாலை கண்டுபிடிப்பதற்காக ஒவ்வொரு வீரரும் நிமிர்ந்து நிற்கும் பொழுது கீழிருந்து இடுப்பு வரையில் அவரது உயரம் எவ்வளவு என அளக்கப்பட்டு அளவு வைத்துக் கொள்ளப்படுகிறது. பின்பு பந்து அந்த உயரத்திற்கு மேல் செல்கிறதா? என்று, ஏற்கனவே எடுக்கப்பட்ட அளவை வைத்து பரிசோதிக்கப்படுகிறது. இந்த வகையில் கீழிருந்து மேலாக இடுப்பு வரையில் தோனியின் உயரம் 1.1 மீட்டராக இருக்கிறது. ஆனால் பந்தின் உயரம் 0.98 என மட்டுமே இருந்தது. இதனால் இடுப்பு உயரத்தை விட கீழே இருந்ததால் மூன்றாவது நடுவர் நோ-பால் இல்லை என அறிவித்தார்.

- Advertisement -