நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு முக்கியமான கட்டத்தில் இரண்டு எளிய கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டார். இதுகுறித்து வீரேந்தர் சேவாக் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த போட்டியில் டெல்லி முதலில் பேட்டிங் செய்து 264 ரன்கள் குவித்தது. ஆனால் ஒரு ஓவர் மீதம் வைத்து பஞ்சாப் சாதனை சேசிங் செய்தது. கடைசி ஐந்து ஓவர்களில் 62 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்பை, கருண் நாயர் தவறவிட்டார். இது போட்டியில் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது.
மீண்டும் கிடைத்த வாய்ப்பு
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கருண் நாயர் உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடினார். இதன் காரணமாக புதிய இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் கொடுக்கப்பட்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளையும் அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த நிலையில் பரபரப்பான போட்டியில் முக்கிய வீரர் அடுத்தடுத்து கொடுத்த இரண்டு எளிய கேட்ச் வாய்ப்புகளை அவர் தவறவிட்டது மிகப்பெரிய விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
இது ஏற்றுக் கொள்ள முடியாது
இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும் போது “இதை ஏற்றுக் கொள்ள முடியாது. உங்களுக்கு முதலில் விளையாட வாய்ப்பே கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் ஃபீல்டராக கிடைத்த வாய்ப்பையாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் இப்படி தவற விட்டால் உங்களை விளையாட வைக்க வேண்டாம் என கேப்டன் நினைப்பார். நீங்கள் ஒரு பேட்ஸ்மேன் என்றால் பேட்டிங் செய்வது மட்டுமே உங்கள் வேலை கிடையாது”
இதையும் படிங்க : என்னோட புது பேவரைட் பிளேயர் சூரியவன்சிதான்.. கொஞ்சம் மிஸ் பண்ணாலும் முடிச்சிடுவாரு – கம்மின்ஸ் பாராட்டு
“வருத்தத்துடன் கூறுகிறேன். கருண் நாயர் நீங்கள் பீல்டிங் செய்ய வந்து இரண்டு கேட்ச் வாய்ப்பை விட்டீர்கள். உங்கள் அணி தோற்றுவிட்டது. நான் கேப்டனாக இருந்து, நீங்கள் அணியில் இல்லாத போது வந்து என்னிடம் ஏன் வாய்ப்பு தரவில்லை என்று கேட்டால், நீங்கள் இப்படிப்பட்ட கேட்ச் வாய்ப்பை விட்டீர்கள் அதனால் விளையாட வாய்ப்பு தரவில்லை என்று சொல்லுவேன். அப்படி நான் சொன்னால் அவரிடம் எந்த பதிலும் இருக்காது” என்று கூறி இருக்கிறார்.






