சொல்லி அடித்த சிஎஸ்கே; ஏலத்தில் எப்பவும் நாங்கதான் கிங் என்று நிரூபித்த சிஎஸ்கே!

0
3067
CSK

ஐபிஎல் மினி ஏலம் தற்பொழுது மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. கடந்த ஆண்டு நடந்து முடிந்த மெகா ஏலத்திற்கு அடுத்து தற்பொழுது மினி ஏலம் நடந்து வருகிறது!

இந்த மினி ஏலத்தில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் சாம் கரன், ஹாரி புரூக், ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் மற்றும் இந்தியாவின் மயங்க் அகர்வால் ஆகியோர் முக்கிய வீரர்களாக பார்க்கப்பட்டார்கள்!

- Advertisement -

எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே இவர்கள் பெரிய தொகைக்கு போயிருக்கிறார்கள். இதில் குறைந்த தொகைக்குப் போனவர் மயங்க் மட்டுமே. மற்ற அனைத்து வீரர்களும் 15 கோடியை தாண்டி இருக்கிறார்கள்!

சென்னை அணியை பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் களத்தில் மட்டுமல்ல ஏலத்திலும் மிகச் சிறப்பான திட்டங்களை கொண்டு வந்து கலக்கும் அணி. இந்த முறையும் அதற்கு தகுந்தவாறு ரசிகர்களை ஏமாற்றாமல் அற்புதமான இரண்டு வீரர்களை வாங்கியிருக்கிறது. குறிப்பாக ரகானாவை வெறும் ஐம்பது லட்சத்துக்கு வாங்கியது!

இதையெல்லாம் விட சாம் கரனை பஞ்சாப் வாங்கவும், கேமரூன் கிரினை மும்பை வாங்கவும், புரூக்கை ஹைதராபாத் வாங்கவும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த சென்னை என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது

- Advertisement -

இந்த நேரத்தில் மற்றவர்களின் பர்ஸ் காலியாக இருக்க, பென் ஸ்டோக்ஸ் ஏலத்திற்கு வந்தார். அவருக்காகவே காத்திருந்தது போல சென்னை அணி மிக அற்புதமாக பிட் செய்து கடைசி வரை கூலாக இருந்து அவரை 16.25 கோடிக்கு தற்போது வாங்கியிருக்கிறது.

இதன் மூலம் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சென்னை அணிக்கு கிடைத்திருக்கிறார். மேலும் இவர் பேட்டிங்கில் ஒரு கேம் சேஞ்சர். மேலும் இவர் ஒரு கேப்டன் மெட்டீரியல். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது இந்த ஏலத்தில் இதுவரை சென்னை அணியின் செயல்பாடு தான் உச்சத்தில் இருக்கிறது என்று கூறலாம்!