கேப்டன் பொறுப்பு கொடுத்ததும்.. ருதுராஜ்கிட்ட நான் இத தேடிக்கிட்டே இருந்தேன் – மைக் ஹசி பேட்டி

0
150
Ruturaj

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகிக் கொள்ள, அவருடைய இடத்துக்கு இளம் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கொண்டுவரப்பட்டார். கேப்டன் பொறுப்பில் முதல் இரண்டு ஆட்டங்களில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றார். டெல்லிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் தோல்வி அடைந்தார்.

கேப்டனாக எடுத்துக் கொண்டால் பந்துவீச்சு மாற்றங்கள் மற்றும் களத்தில் அமைதியாக இருப்பது என ருதுராஜ் எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருக்கிறார். முதல் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக பவர் பிளேவில் அவர் பந்துவீச்சாளர்களை மாற்றி பயன்படுத்திய விதம் எல்லோரது பாராட்டையும் பெற்றது.

- Advertisement -

அதே சமயத்தில் கேப்டன் பொறுப்பு வந்த பிறகு ஒரு பேட்ஸ்மேன் ஆக அவரை எடுத்துக் கொண்டால், இதுவரை நடைபெற்றுள்ள மூன்று போட்டிகளிலும் அவரிடமிருந்து பெரிய பங்களிப்புகள் எதுவும் வரவில்லை. எனவே இது அவர் குறித்த கவலை அளிக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது. மேலும் டெல்லிக்கு எதிரான கடைசிப் போட்டி தோல்வியில் இருந்து இன்று ஹைதராபாத்துக்கு எதிராக நடக்கும் போட்டியில் வெற்றிக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ருத்ராஜுக்கு சிரமம் இருக்கிறது என்று கூறப்பட்டது. அதே சமயத்தில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை கொடுக்காமல் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார். ஆனால் இந்த முறை மூன்று போட்டியிலும் இடதுகை வேகப் பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை கொடுத்து இருக்கிறார்.

கேப்டன் பொறுப்பு ருதுராஜை மாற்றி இருக்கிறதா என்பது குறித்து பேசி உள்ள சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி “நான் நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால், ருதுராஜ் அற்புதமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். கேப்டன் பொறுப்பு ஒரு நபராகவும் அவருடைய குணாதிசயத்திலும் மாற்றங்களை ஏற்படுத்துமா? என நான் தேடிக்கிட்டே இருந்தேன். ஆனால் அவர் எப்பொழுதும் சீரானவராகவே இருக்கிறார். மேலும் எப்பொழுதும் தயாராவது போலவே தன் வழியில் தயாராகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : என்னோட கவனம் வேகத்துல கிடையாது.. நான் உழைக்கிறது இந்த விஷயத்துக்காகத்தான் – மயங்க் யாதவ் பேட்டி

அவருக்கு இன்னும் அவரைச் சுற்றி ஒரு நல்ல ஆதரவு அமைப்பு இருக்கிறது. தோனி இன்னும் அவருடன் இருக்கிறார். மேலும் பயிற்சியாளர் பிளமிங் மற்றும் நான் என அவரைச் சுற்றி பெரிய ஆதரவு அமைப்பு இருக்கிறது. மேலும் வீரர்களின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது. எனவே அவர் சிறப்பாக செயல்படுவார். அவர் தனது யுத்திகள் மற்றும் பந்துவீச்சு மாற்றங்களில் சிறப்பாக இருக்கிறார். மேலும் களத்தில் மிகவும் இயல்பாகவும் அமைதியாகவும் செயல்படுகிறார்” என்று கூறியிருக்கிறார்.