நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளன.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் துணை பயிற்சியாளர், நூர் அகமது இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட விதம் குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் ஆடிய சிஎஸ்கே அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே அணிகள் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 48 ரன்கள் குவித்தார். முதலில் அதிரடியாக சிஎஸ்கே விளையாடிய நிலையில் அதற்குப் பிறகு சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானம் இருந்த காரணத்தால் பெரிய ரன்களுக்கு செல்ல முடியவில்லை.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணிக்கு சிஎஸ்கே அணியின் ஸ்பின் பந்துவீச்சு சவாலாக அமைந்தது. சிஎஸ்கேவின் முக்கிய ஸ்பின்னர் ஆக கருதப்படும் நூர் அகமது 4 ஓவர்களில் 21 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார். கடந்த 4 போட்டிகளாக விக்கெட்டுகள் எடுக்க தடுமாறிய நூர் அகமது இந்த போட்டியில் ஆடுகளத்தை பயன்படுத்தி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதனால் சிஎஸ்கே அணி இரண்டாவது வெற்றியை தொடர்ச்சியாக பதிவு செய்துள்ள நிலையில் புள்ளி பட்டியலில் தற்போது எட்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதற்கு முந்தைய போட்டியில் டெல்லி அணியை வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் துணைக்கோச் ஸ்ரீதரன் ஸ்ரீராம், நூர் அகமது கடந்த பயிற்சி அமர்வில் எம்.எஸ். தோனியுடன் நீண்ட நேரம் உரையாடினார் எனவும், அந்த கருத்துப் பரிமாற்றம்தான் தற்போது களத்தில் பார்க்கிறீர்கள் எனவும் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “நூர் அஹமது எம்.எஸ் தோனி உடன் ஒரு பயிற்சி அமர்வில் மிக நீண்ட நேரம் உரையாடினார். அவர் தனது லெக் பிரேக் பந்துவீச்சை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பது குறித்த விஷயங்கள் தோனியிடம் பகிர்ந்திருக்கிறார். அந்த வகையான கருத்து பரிமாற்றம் தான் தற்போது களத்தில் கண்கூடாக தெரிகிறது. அது அவருக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கிறது அதுதான் தற்போது மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்” என்று அவர் பேசி இருக்கிறார்.