மும்பை, சிஎஸ்கே இரண்டு பெரிய அணிக்கு ஆடியவனாக சொல்கிறேன்… இரு அணிகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, அதனால் தான் இத்தனை முறை கோப்பையை வெல்கிறார்கள் – சூப்பரான தகவலை சொன்ன அம்பத்தி ராயுடு!

0
8799

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே இரு அணிகளுக்கும் இப்படி ஒரு ஒற்றுமை இருக்கிறது அதனால் தான் அவர்களால் பல வருடங்களாக மாறி மாறி கோப்பையை வெல்ல முடிகிறது என இரு அணிகளுக்கும் விளையாடிய அம்பத்தி ராயுடு பேட்டி அளித்துள்ளார்.

அம்பத்தி ராயுடு தனது ஐபிஎல் கெரியரை கோப்பையை வென்று சிறந்த முறையில் முடித்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகிய இரு சிறந்த அணிகளுக்காக விளையாடி இரு அணிகளும் அணிகளிலும் தலா மூன்று முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று மொத்தம் ஆறு முறை ஐபிஎல் போட்டிகளில் பெற்றிருக்கிறார். அதிக முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற வீரர் என்கிற சாதனையை ரோகித் சர்மாவுடன் சமன் செய்திருக்கிறார்.

- Advertisement -

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிபோட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது சிஎஸ்கே அணி. இந்த இறுதிப்போட்டியுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போட்டிக்கு முந்தைய நாள் அம்பத்தி ராயுடு அறிவித்தார். கோப்பையை வென்று வெற்றிகரமாக தனது ஐபிஎல் வாழ்க்கையை முடித்தார்.

2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியிலும் மற்றும் 2018 முதல் 2023 வரை சிஎஸ்கே அணியிலும் என இரண்டு தலைசிறந்த அணிகளுக்கு விளையாடிய அம்பத்தி ராயுடு, இரு அணிகளுக்கும் விளையாடிய வெகு சில வீரர்களுள் ஒருவர் ஆவார்.

ராயுடு ஓய்வு பெற்றவுடன் அளித்த பேட்டியில் இரு அணிகளில் விளையாடியது குறித்தும், இரு அணிகளுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை குறித்தும் மற்றும் எதனால் வெற்றிகரமான அணிகளாக இருக்கின்றது என்பது பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

“ஐபிஎல் கிரிக்கெட்டில் பல வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே இரண்டு அணிகளும் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதற்கு காரணம். அவர்கள் அணிக்காக பாடுபடும் வீரர்களை கொண்டுள்ளார்கள் என்பதால்தான். தனிப்பட்ட சூப்பர் ஸ்டார்கள் அணியில் இருப்பதை தாண்டி அனைவரும் களத்தில் இறங்கும் பொழுது அணியின் வெற்றிக்காக செயல்படுகின்றனர்.

வீரர்களை எந்த இடத்தில் களமிறக்கினாலும், அவர்களுக்கு எந்த ரோல் கொடுத்தாலும் அதில் ஈடுபாட்டுடன் செயல்படுகின்றனர். அதனால்தான் இவர்களால் வெற்றிகரமாக இருக்க முடிகிறது. மேலும் வீரர்களுக்கு எந்த சூழலிலும் பக்கபலமாக இருக்கின்றனர்.

- Advertisement -

இரு அணிகளிலும் ஆரஞ்சு தொப்பி, பர்பிள் தொப்பி எதையும் பார்க்க முடியாது. இந்த முறையும் சிஎஸ்கே அணியில் யாரிடமும் ஆரஞ்சு தொப்பி, பர்பிள் தொப்பி இல்லை. ஆனால் கோப்பை இருந்திருக்கிறது. இதற்கு காரணம் ஒட்டுமொத்த அணியாக செயல்படுவது தான். அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பை கொடுத்து வருவதால் தான் இது பல வருடங்களாக சாத்தியமாக இருக்கிறது.” என்று பகிர்ந்து கொண்டார் ராயுடு.