இந்திய டெஸ்ட் அணியில் ரகானே வாய்ப்ப விமர்சிப்பவர்கள் ஆறு மாதம் காட்டுக்குள் எங்காவது இருந்திருப்பார்கள் – ரவி சாஸ்திரி நேரடி தாக்குதல்!

0
487
Rahane

பதினாறாவது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் மார்ச் 31ஆம் தேதி துவங்கி மிகவும் சிறப்பாகவும் பரபரப்பாகவும் நடைபெற்று வருகிறது!

இந்த வருட ஐபிஎல் சீசன் மே 28ஆம் தேதி முடிவடைய, இங்கிருந்து இந்திய அணி நேராக இங்கிலாந்து சென்று ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணி உடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது!

- Advertisement -

இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு பின்பு அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட ரகானே மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பி இருக்கிறார்.

இந்த வருட ரஞ்சி சீசனின் இறுதியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ரகானே, ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய டெஸ்ட் பேட்டிங் யூனிட்டில் மிடில் ஆர்டர் ஸ்ரேயாஸ் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் விளையாட முடியாத நிலையில் அனுபவ வீரரான ரகானேவுக்கு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கான வாய்ப்பை சில பலர் விமர்சனம் செய்தும் வருகிறார்கள்.

இப்படியான விமர்சனங்கள் குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ” அவர் மூன்று ஐபிஎல் போட்டிகளில் நன்றாக விளையாடியதால்தான் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்திருப்பதாக மக்கள் சிலர் நினைக்கிறார்கள். அவர் இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடிய ஆறு மாத காலத்தில் இவர்கள் ஏதாவது விடுமுறையில் இருந்திருக்க வேண்டும். யாருடனும் தொடர்பு கொள்ள முடியாத காட்டில் எங்காவது இருந்திருக்க வேண்டும். இப்படி இருந்திருந்தால்தான் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் கடைசியாக அடித்த 600 ரன்கள் அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கும்.

- Advertisement -

அவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஐபிஎல் தொடரில் இரண்டு மூன்று ஆட்டங்களில் மிகவும் அழகாக பேட்டிங் செய்தார். நல்ல டச்சில் தெரிந்தார். ஸ்ரேயாஸ் காயமடைந்த விஷயத்தில் இருந்து இவருக்கான வாய்ப்பை நீங்கள் பார்க்க வேண்டும்.

விராட் கோலி இல்லாத பொழுது இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக அந்த மனிதர் ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரை வென்றதை நாம் மறக்க கூடாது. மேலும் எம் சி ஜி யில் அவர் அடித்த சதத்தையும் மக்கள் மறந்து விடுகிறார்கள். அவரது அனுபவம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புவோம்!” என்று கூறியிருக்கிறார்!