ஐ.பி.எலில் இந்த 6 நட்சத்திர வீரர்கள் இந்தெந்த அணிகளுக்கு விளையாடி இருக்கிறார்களா

0
581
Chahal and Sanju Samson

2008ம் ஆண்டு பிசிசிஐ ஐ.பி.எல் தொடரை தொடங்கி வைத்தது. கிரிக்கெட்கிரிக்கெட் உலகில் பல தொடர்கள் இருப்பினும் ஐ.பி.எல் தொடரே பெரிதாகக் கொண்டாடப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம், ஐ.பி.எல் ஏலம் என்றே சொல்லலாம். ஒவ்வொரு வருடமும் ஜனவரி–பிப்ரவரி மாதங்களில் இந்த ஏலம் நடைபெறும். ஒரு வீரரை வாங்க அனைத்து அணிகளும் போட்டிபோடுவது பார்ப்பதற்கே மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

ஏலம் என்பதால் இந்த ஆண்டு ஒரு அணிக்காக விளையாடிய வீரர் அடுத்த ஆண்டு மற்றொரு அணிக்கு விளையாடலாம். ஐ.பி.எலில் அதிக அணிகளுக்கு விளையாடிய சாதனையை ஆரோன் பின்ச் வைத்துள்ளார். நம்மில் பலருக்கு தெரியாத 6 நட்சத்திர வீரர்கள் இந்த அணிக்கு விளையாடி இருக்கிறார்கள்.

- Advertisement -

6. செத்தேஸ்வர் புஜாரா

புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டின் அடுத்த ராகுல் டிராவிட். டெஸ்ட் கிரிக்கெட்டின் மேதை என்றே இவரை அழைக்கலாம். இந்திய அணிக்காக இவர் டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே ஆடி வருகிறார். இருப்பினும் ஐ.பி.எல் டி20 தொடரின் முதல் மூன்று சீசனில் இவர் பங்கேற்றுள்ளார்.

2008 முதல் 2010 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இவர் விளையாடியுள்ளார். பவர்பிளேவில் சிறப்பாக ஆடி பவுண்டரிகள் அடிப்பதால் இவரை கொல்கத்தா அணி தக்க வைத்துக் கொண்டனர். பின்னர் அவர் ஃபார்ம் அவுட் ஆகி சிறப்பாக விளையாட தவறினார். அதனால் 2011 ஏலத்தில் அவரி கொல்கத்தா அணி விடுவித்தது.

அதன் பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு விளையாட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். காயம் காரணமாக அவருக்கு பெரிதாக வாய்ப்புக் கிடைக்கவில்லை. அந்த காயதினால் ஒரு வருட காலத்திற்கு அவர் பெரிதாக கிரிக்கெட் விளையாடவில்லை

- Advertisement -

5. யுஸ்வோந்திர சாஹல்

நடப்பு இந்திய அணியின் முன்னணி ஸ்பின்னெராக சாஹல் திகழ்கிறார். 2008ம் ஆண்டே அவர் மும்பை இந்தியன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார். முதல் மூன்று ஆண்டுகளில் அவர் ஒரே ஒரு ஐ.பி.எல் போட்டியில் மட்டுமே ஆடினார்.

2011 சாம்பியன்ஸ் லீக் தொடரில் தன்னுடைய முழு திறனையும் சாஹல் வெளிப்படுத்தினார். ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மூன்று ஓவர்களில் பந்துவீசி வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெடையும் கைப்பற்றினார். அன்று 139 ரன்களை மும்பை டிபனட் செய்ததற்கு இவரும் ஒரு முக்கியக் காரணம்.

2014ம் நடந்த ஐ.பி.எல் ஏலத்தில் மும்பை அணி சாஹலை விடுவித்தது. அந்த வருடம் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இவரை அடிப்படைத் தொகையில் வாங்கியது

4. விருத்திமன் சாஹா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்றால் அனைவர் நினைவுக்கும் வருவது தல தோனி தான். தோனி அணியில் இருப்பதால் மற்ற கீப்பர் பேட்ஸ்மேனுக்களுக்ம் வாய்ப்புக் கிடைத்தது கஷ்டம் தான். 2011ம் ஆண்டு தோனிக்கு பேக்கப்பாக சாஹாவை சென்னை அணி வாங்கியது.

இருப்பினும் அவருக்கு 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளிலே வாய்ப்புக் கிடைத்தது. அதற்கு முன் முதல் மூன்று ஆண்டுகள் அவர் கொல்கத்தா அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. ஷிக்கர் தவன்

Dhawan Mumbai Indians

முதல் சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய ஷிக்கர் தவன், அடுத்த ஆண்டு மும்பை அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். 2ஆவது மற்றும் 3ஆவது சீசனில் மும்பை அணிக்காக இவர் சிறப்பாகவே விளையாடினார். அதன் பின்னர் 2013ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்.

கேப்டனாக ஷிக்கர் தவன் சிறப்பாக செயல்படவில்லை. அதனால் 2014ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக டேரன் சம்மி நியமிக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் 5.2 கோடிக்கு ஹைதராபாத் அணியால் தக்க வைத்துக் கொள்ளப்பட்டார். அதன் பிறகு 2019ம் ஆண்டு மீண்டும் டெல்லி அணிக்கு டிரேட் மூலம் சென்றடைந்தார்

2. ரவிந்திர ஜடேஜா

Ravindra Jadeja KTK

முதல் ஐ.பி.எல் தொடரில் ஜடேஜா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். அதற்குப் பின்னர் அவர் கொச்சி டஸ்கின் வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். கொச்சி அணியில் அவர் சிறப்பாக விளையாடி எதிரணி வீரர்கள் சிம்ம சொப்பனமாக விளங்கினார்

செப்டம்பர் 2011ல் கொச்சி டஸ்கின் வாரியர்ஸ் அணி ஐ.பி.எல் தொடரில் இருந்து நீக்கப்பட்டது. அதனால் 2011 ஏலத்தில் 9.8 கோடிக்கு ரவீந்திர ஜடேஜா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். 2011ல் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் ஜடேஜா தான்

1. சஞ்சு சாம்சன்

அதிரடி வீரர் சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிக்கு விளையாடியது நமக்கு நன்கு தெரியும். இவர் 2012ல் கொல்கத்தா அணியில் இடம் பெற்று இருந்தார் என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது.