முதல் ஆட்டத்திலேயே தந்தை சந்தர்ப்பாலின் சாதனையை சமன் செய்த மகன் – அட்டகாசமான தொடக்கம்

0
14195

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி ஒரு காலத்தில் உலகையே கட்டி ஆண்டு கொண்டிருந்தது ..1975 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்று கிரிக்கெட் உலகில் தனது சாம்ராஜ்யத்தை வியாபித்திருந்தது அப்போது அந்த அணியில் கிளைவ் லாயிட் , சர். ரிச்சர்ட்ஸ் , டஸ்மாண்ட் ஹெய்ன்ஸ் ,கர்டன் கிறீன்ட்ஜ் போன்ற அபாயகரமான பேட்ஸ்மேன்களும் மைக்கேல் ஹோல்டிங் , ஜோயல் கார்னர் , பேட்ரிக் பெட்டர்சன் போன்ற புயல் வேக பந்துவீச்சாளர்களும் இருந்தனர் ..

இவர்களின் ஓய்வுக்கு பின் மேற்கிந்திய தீவுகள் அணியின் பலம் கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியது அவர்கள் கட்டி வைத்திருந்து சாம்ராஜ்யம் அவர்களின் கரங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கியது . 90 களுக்கு பின்பான மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர்கள் என்று பார்த்தால் அதில் முதன்மையாக இருப்பவர் பிரைன் லாரா இவரை அடுத்து முக்கிய வீரர்களாக கார்ல் ஹூப்பர் மற்றும் ஷிவ்நரேன் சந்தர்பால் இவர்கள் இருவரும் முக்கியமான வீரர்கள்.

- Advertisement -

90களின் துவக்கத்திலிருந்து ஏறக்குறைய 21 வருடங்களாக மேற்கிந்திய தீவுகள் அணியின் டேட்டிங் இன் முதுகெலும்பாக விளங்கியவர் ஷிவ்நரேன் சந்தர்பால். இவர் பேட்டிங்கில் நிலைத்து நின்று ஆடிவிட்டால் இவரை ஆட்ட முழக்க செய்வது மிகவும் கடினமான காரியம். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 164 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ள அவர் 11,867 ரன்களை எடுத்துள்ளார் . இதில் 30 சதங்களும் 66 அரை சதங்களும் அடங்கும் . வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் .

மேற்கிந்திய தீவுகள் அணி T20 உலக கோப்பையின் அதிர்ச்சி தோல்விக்கு பின்னர் மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் முன்னாள் வீரர் ஷிவ்நரேன் சந்தர்பால் மகன் டக்னரின் சந்தர்பால் அறிமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டிருந்தார் .

ஏற்கனவே நடைபெற்ற பயிற்சி போட்டியில் சதம் அடித்திருந்த டக்னரின் சந்தர்பால் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறக்கப்பட்டார் . இவர் தன்னுடைய அறிமுக போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் தொப்பியை முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டனும் கிரிக்கெட் ஜாம்பவானுமான பிரைன் லாரா விடமிருந்து பெற்றுக் கொண்டார் .

- Advertisement -

இந்த நிகழ்வின் போது பிரைன் லாரா “உன்னுடைய தந்தையின் அறிமுகப் போட்டியின் போதும் நான் மைதானத்தில் இருந்தேன் அவருடைய மகனான உன்னுடைய அறிமுகப் போட்டியின் போதும் நான் மைதானத்தில் இருக்கிறேன் இது என் வாழ்வில் ஒரு மறக்க முடியாத தருணம்” என்று கூறினார் ,

தன்னுடைய முதல் சர்வதேச இன்னிங்ஸை மிகச் சிறப்பாக துவக்கிய டேக்னரின் சந்தர்பால் தனது ஆரம்பப் போட்டியிலேயே அரை சதம் அடித்தார் . 79 பந்துகளுக்கு 51 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார் . இவரது தந்தையான ஷிவ்நரேன் சந்தர்பாலும் தன்னுடைய அறிமுகப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

டக்னரின் சந்தர்பால் மேற்கிந்திய தீவுகளின் 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடி தன்னை நிரூபித்து தனது வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருந்தார் . இவ்வேளையில் ஆஸ்திரேலியா தொடருக்கான அணிகளிடம் பெற்ற அவர் பயிற்சி போட்டிகளை சரியாக பயன்படுத்தி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார் . அந்த சிறப்பான ஆட்டம் ஆனது அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பை பெற்று தந்தது .