கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

இந்திய டி20 தொடர்.. வலிமையான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு.. உலக கோப்பை பைனலின் நட்சத்திர வீரர்கள் ரிட்டன்

நியூசிலாந்து தொடரில் விளையாடி வரும் இந்திய அணி இதற்குப் பின், தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தியா ஏற்கனவே தங்களது அணியை அறிவித்திருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்கா தங்களது 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

- Advertisement -

நான்கு போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டி நவம்பர் எட்டாம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது போட்டி நவம்பர் 10, மூன்றாம் போட்டி நவம்பர் 13 மற்றும் நான்காவது போட்டி நவம்பர் 15ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி அனைத்து போட்டிகளும் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

டி20 உலக கோப்பை 2024 பைனல்

கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி 2024 டி20 உலக கோப்பை பைனல் நடைபெற்றது. இதில் இந்திய அணிக்கு எதிராக ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை தவறவிட்டது. அதற்கு பின் முதல் முறையாக இந்தத் தொடரில் தான் இரு அணிகளும் சந்திக்கிறது.

இந்திய அணியின் கோப்பை கனவை கிட்டத்தட்ட கலைக்க இருந்த டேவிட் மில்லர் மற்றும் ஹென்ரிச் கிளாசன் இருவரும் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளது இந்தத் தொடரின் சுவாரசியத்தை கூட்டி உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரையில் சூரியகுமார் தலைமையில் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற நட்சத்திர வீரர்கள் இடம் பெறுகிறார்கள்.

- Advertisement -

தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

நட்சத்திர பவுலர்களான ககிசோ ரபாடா மற்றும் லுங்கி நிகிடி இருவருக்கும் இந்த டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் அவர்களது பணிச்சுமையை குறைப்பதற்காகவும் மற்றும் இதற்கு பின் நடைபெற உள்ள இலங்கை டெஸ்ட் தொடருக்கு தயார் நிலையில் இருப்பதற்காகவும் என்று தென் ஆப்பிரிக்கா கோச் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: ஸ்பின்ல நாங்க இப்படித்தான் ஆடனும்.. நல்ல பேட்ஸ்மேன் இதை கட்டாயம் செய்வாங்க – கம்பீர் பேட்டி

தென்னாப்பிரிக்கா டி20 அணி: ஐடன் மார்க்ராம், ஒட்னீல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, டோனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், பேட்ரிக் க்ரூகர், கேசவ் மஹாராஜ், டேவிட் மில்லர், மிஹ்லாலி ம்பொங்வானா, நகாபா பீட்டர், ரியான் ரிக்கெல்டன், லுஸ்டான் சிமிபலாம்லாப்ஸ்

- Advertisement -
Published by