இந்திய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும்? என்பது குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேட்டி அளித்திருக்கிறார்.
நாளை மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பு சம்பிரதாய பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பயிற்சியாளர் கம்பீர் சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
திறமை குறைந்ததாக நினைக்கவில்லை
இதுகுறித்து பேசி இருக்கும் கம்பீர் கூறும் பொழுது “சுழல் பந்துவீச்சுக்கு எதிராக விளையாடும் திறமை இந்திய பேட்ஸ்மேன்களுக்கு குறைந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. சில நேரம் இதற்கான கிரெடிட்டை நீங்கள் எதிரணிக்கும் கொடுக்க வேண்டும். கடைசி போட்டியில் சான்ட்னர் நல்ல விதத்தில் பந்து வீசினார். நாங்கள் தொடர்ந்து கடினமாக உழைத்து முன்னேறுவோம். வீரர்கள் வலை பயிற்சியில் மிகவும் கடுமையாக உழைத்து வருகிறார்கள்”
“எது எப்படி என்றாலும் சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் இறுதியாக வெற்றி பெற வேண்டும் முடிவுதான் முக்கியம். ஆனால் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக எங்களது திறமை குறைந்து விட்டதாக நான் எப்போதும் நினைக்கவில்லை. இது கடினமாக உழைத்து மேலும் முன்னேறுவது பற்றியது”
சிறந்த பேட்ஸ்மேன்கள் இதை செய்வார்கள்
“சில நேரங்களில் உங்களுக்கு பந்தை அடித்து விளையாடுவது பழகி விடுகிறது. எட்டு அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் கொஞ்சம் மெதுவான கைகளில் விளையாடியதை மறந்து விடுகிறீர்கள். ஒரு முழுமையான சிறந்த பேட்ஸ்மேன் டி20 கிரிக்கெட்டில் இருந்து தன்னை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்”
இதையும் படிங்க : சூர்யா ஹர்திக்கை விட.. நான் கம்மி சம்பளத்துக்கு ஒத்துக்கிட்ட காரணம் இதுதான் – ரோஹித் சர்மா விளக்கம்
“வளர்ச்சி என்பது பந்தை சிக்ஸர் அடிப்பது மட்டும் கிடையாது.நீங்கள் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடும் பொழுது, எத்தனை செஷன்கள் விளையாடுகிறீர்கள் என்பதை பற்றியது. இப்படியான ஆடுகளத்தில் நீங்கள் பந்தை சிக்ஸர்களுக்கு அடிக்க முடியாது.ஆனால் நீங்கள் சிறப்பாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து விளையாட முடியும். அப்படிதான் செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






