ரோகித் ஏபிடிக்கு இடமில்லை.. ஹர்ஷா போக்லே வெளியிட்ட ஆல் டைம் ஐபிஎல் XI.. 2 சிஎஸ்கே வீர்களுக்கு இடம்

0
174
Rohit

புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளரும், ஆய்வாளருமான ஹர்ஷா போக்லே 2008ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் ஐபிஎல்லைக் கருத்தில் கொண்டு தனது ஆல் டைம் ஐபிஎல் அணியை தேர்வு செய்திருக்கிறார்.

அதில் குறிப்பிடத்தக்க விதமாக மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஆர்சிபி அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் ஆகியோரிடம் பெறவில்லை.

- Advertisement -

இந்தியாவின் புகழ்பெற்ற உள்நாட்டு தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது டி20 தொடர் வடிவில் கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நட்சத்திர வீரர்களும் பங்கு பெற்று விளையாடுவது இது மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் புகழ்பெற்ற வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ஐபிஎல் தொடரில் விளையாடிய சிறந்த வீரர்களை கணக்கில் கொண்டு தனது ஆல் டைம் பிளேயிங் லெவன் ஐபிஎல் அணியை தேர்வு செய்துள்ளார்.

அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோர் இருக்கின்றனர். மூன்றாவது வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா இடம்பெற்றிருக்கிறார். மும்பை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் மிடில் வரிசையில் வலு சேர்க்கிறார். இவர்களுக்கு அடுத்தபடியாக சென்னை அணியின் மகத்தான வீரரான மகேந்திர சிங் தோனி கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

இவரது ஆல் ரவுண்டர் பட்டியலில் ஹர்திக் பாண்டியா மட்டுமே இடம்பெற்று இருக்கிறார். மேலும் சுழற் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ரஷித் கான் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் இடம் பெற்று இருக்கின்றனர். வேகப் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் மும்பை அணியில் இடம் பிடித்த முன்னாள் வீரர் ரசித் மலிங்கா மற்றும் தற்போதைய நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில் மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி 5 ஐபிஎல் பட்டங்களை வென்று கொடுத்த ரோஹித் சர்மா அணியில் இடம் பெறவில்லை. மேலும் பெங்களூர் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது. இது தற்போது சர்ச்சையையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணியை வீழ்த்தியாச்சு.. அடுத்து இந்தியாதான்.. அங்க இவர் பெருசா பண்ணுவாரு – பங்களாதேஷ் கேப்டன் பேச்சு

ஹர்சா போக்லே தேர்வு செய்த ஆல் டைம் ஐபிஎல் அணி: விராட் கோலி, கிறிஸ் கெய்ல், சுரேஷ் ரெய்னா, சூர்யகுமார் யாதவ், எம்.எஸ். தோனி (கேட்ச் & வி.கே.), ஹர்திக் பாண்டியா, லசித் மலிங்கா, ஜஸ்பிரித் பும்ரா, ரஷித் கான், சுனில் நரைன்.

- Advertisement -